காமிக்ஸ் எழுத்தாளர் ஆலன் மூர் ஓய்வு - டிசி காமிக்ஸ் சாதனையாளர்.



Image result for alan moore




டிசி காமிக்ஸ் மேட் இதழை நிறுத்துவது பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அதோடு வரவேற்பு குறைந்த தால் வயது வந்தோருக்கான வெர்டிகோ எனும் காமிக்சையும் அடுத்து டிசி காமிக்ஸ் நிறுத்தவிருக்கிறது.

முக்கியமானது காமிக்ஸ் இல்லாமல் போவது அல்ல. வாட்ச்மேன்(1987), வி ஃபார் வென்டெட்டா(1989) உள்ளிட்ட காமிக்ஸ்களை எழுதிய எழுத்தாளர் ஆலன் மூர் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு லீக் ஆப் தி எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் எனும் காமிக்ஸின் நான்காவது பாகத்தை எழுதியவர், இனி எழுதுவதற்கு எனக்கு ஏதுமில்லை. ஏறத்தாழ என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த விஷயங்களை நான் செய்துவிட்டேன் என்று தி கார்டியன் பத்திரிகையில் கூறியிருந்தார்.

டிசி நாயகர்கள் சற்று மனிதர்களோடு புழங்கும்படி மனித த்தன்மையோடு இருந்தனர். மேலும் இவரது படத்தின் எதிர் நாயகர்களும் அப்படியே. இந்த வேறுபாட்டை தொண்ணூறுகளிலிருந்து மூரின் படைப்புகளில் உணரலாம். இவர் காலத்தில் எழுதி வந்த கைமன், மோரிசன் ஆகியோரோடு ஒப்பிடும் போது வேறுபாட்டை எளிதாக உணர முடியும்.

 1982 - 85 இல் மிராக்கிள்மேன் என்ற காமிக்ஸ் கதைத் தொகுதியைத் தொடங்கினார் மூர். இதில்தான மூர் பல்வேறு ஃபேன்டசி திருப்பங்களை உருவாக்கினார். மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற காமிக்ஸ் கதை இது. 

1982-89 இக்காலகட்டத்தில் பிரிட்டனில் மார்க்கரேட் தாட்சர் ஆட்சி செய்து வந்தார். இந்த ஆட்சியை மறைமுகமாக பகடி செய்து வி ஃபார் வென்டெட்டா என்று காமிக்ஸ் கதையாக்கினார். நாஜி ரக ஆட்சியாளர் மக்களை முழுக்க கண்காணிப்பதை எழுதினார். இதில் வரும் கதாபாத்திரமான வி, பெயர் இல்லாதவர். ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளைச் சொல்லியபடி அரசு செய்யும் கொடுமைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவார்.

இவரின் மாஸ்கை ஆலன் மூர் உருவாக்கினார் என்பது பலருக்கும் தெரியாது. இந்த மாஸ்க் இன்றுவரை அரசுக்கு எதிரான போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்று அரபு புரட்சியின்போது பயன்பட்டது. இதன் விளைவாக சில காலம் இந்த முகமூடி விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டது.

வாட்ச்மேன் (1986-87), இக்கதை டைம் இதழில் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலில் இடம்பெற்ற காமிக்ஸ் கதை இதுவே. அமெரிக்காவை களமாக கொண்டு எழுதப்பட்ட போஸ்ட் மாடர்னிச கதை. பாப் கலாசாரத்தை மீண்டும் தீவிரப்படுத்த இக்கதை உதவியது. வாட்ச்மேன் கதையை கிராபிக் நாவல் என டிசி மார்க்கெட் செய்தது. இதற்குப் பின் பல்வேறு காமிக்ஸ் கதைகளை எழுதினார். அதில்  ஸ்வாம்ப், ஜான் கான்ஸ்டான்டைன், லீக் ஆப் தி எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்(1999 -2019) ஆகிய கதைகள் முக்கியமானவை.

நன்றி - லிவ் மின்ட்