அடிப்பதும் உதைப்பதும் காதல்தான்! - பெண்கள் என்ன சொல்கிறார்கள்?




Image result for toxic masculinity






அர்ஜூன் ரெட்டி, இளைஞர்களுக்கான படம். அதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காக நாயகன் செய்யும் செயல்கள் கடும் மூர்க்கம் நிரம்பியவையாக இருக்கும். செக்ஸ், முத்தம் என தீப்பற்றும் ஆண் மேலாதிக்கம் அதில் இருக்கும். இந்திக்கு சென்ற அதே படம் கபீர் சிங்காக அதில் நடித்த சாகித் கபூருக்கு மறு வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. ஆனால் அதேசமயம் பெண்களை இப்படி காட்டலாமா என்ற கேள்வியையும் படம் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான விமர்சனத்திற்கு பதிலாக இயக்குநர் சந்தீப் வாங்கா, தான் காதலிப்பவளை ஒருவன் அறைவதற்கு கூட வாய்ப்பில்லாத சூழல் காதல் கிடையாது கூறினார். அதோடு, இப்படத்தின் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு காதல் குறித்த எந்த அனுபவமும் இல்லை என்று காட்டமாக கூறினார். அப்படியா என்று சிலரைக் கேட்டோம்.


ஸாரியா பட்னி (33)

ஸாரியா பதினெட்டு வயதில் இருந்தார். அப்போது பள்ளியில் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீராங்கனை. அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பையன் ஒருவர் ஸாரியாவை நோட்டமிடத் தொடங்கினார். எனக்கும் அந்த வயதில் பெரிதாக யோசிக்கத் தோன்றவில்லை. அவன் அழகாக இருந்தான். ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவனை நேசித்தேன். இருவரும் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினோம்.

அதன்பிறகுதான். பிரச்னைகள் தொடங்கின. கல்யாண மேடையிலேயே ஸாரியாவின் பெற்றோரை அவமதித்த காதலன், அதன்பிறகு ஸாரியாவை கடுமையாக கண்காணிக்க தொடங்கினார். துபாய் சென்றபிறகு குழந்தை பிறந்து இந்தியாவுக்கு வரும்வரை அந்த வாழ்க்கையை நரகம் என்று ஸாரியா கூறினார். சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் எங்களுக்கு இடையே சண்டை வர ஆரம்பிச்சுது. தேனிலவின்போது கோபம் வந்து தெருவிலேயே என்னை கணவர் அறைந்தார். நான் கர்ப்பம் ஆன பின்பும் கூட துன்புறுத்தல்கள் குறையலை. இதனால் வேறுவழியில்லாம அந்த உறவை துண்டிக்கவேண்டியதாக போச்சு. மகன் பிறந்தப்புறம் நான் விவாகரத்து கோரி விண்ணப்பிச்சு 2012 ஆம் ஆண்டுதான் எனக்கு அதில் தீர்ப்பு கிடைச்சுது. பாஸ்போர்ட்டிலும் என் முன்னாள் கணவர் பெயரை நீக்கிட்டேன்.

என்கிறார்.

ராஷ்மி ஆனந்த்

52 வயதான ராஷ்மிக்கு திருமணம் பத்து ஆண்டு கால நரகத்தைப் பரிசீலித்தது.  சுவற்றில் தலை மோதி, மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கை முறிந்து என அத்தனை கோரங்களும் பத்து ஆண்டுகளில் நடந்தவை. பின், டில்லியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை அளிப்பது முதற்கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கி செயற்பாடுகளை இன்று ஒழுங்குபடுத்தி உள்ளார்.

ஆனால் இந்த வன்முறை காரணமாக, கற்றல் குறைபாடு கொண்ட இவரது மகன் பேசமுடியாமல் போய்விட்டது இன்றும் ராஷ்மி மறக்கமுடியாமல் தவிக்கிறார்.

இந்து கோபால் (30)

இது வேலைக்காகாது. இனி இதையும் தொடர முடியாது என்ற பேசும் இந்து கோபால் விவாகரத்திற்கு பிறகே நிம்மதி அடைந்திருக்கிறார். பெங்களூருவில் பணிசெய்த இந்து, தன் கல்லூரி நண்பரைத்தான் திருமணம் செய்தார். கணவருக்காக வேலையை கைவிட்டு சென்னையில் குடியேறினார். ஆனால் மெல்ல அவரின் கணவர் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். அடிப்பது, உதைப்பது, கடிப்பது என இரவுகளில் தொடங்கும் சித்திரவதையின் தடயங்கள் பகலிலும் பிறருக்குத் தெரிய தொடங்கியது. இதன் விளைவாக தற்போது சென்னையை விட்டு விலகி ஹைதராபாத் சென்று பணியாற்றி வருகிறார்.

சென்னையில் தன் கணவர்களின் உறவினர்களால் பாதிப்பு ஏற்படும் என்று மன அழுத்தம் ஏற்பட, பயந்து ஹைதராபாத்தில் பணியாற்றச் சென்றேன்.

நன்றி: டைம்ஸ் - ஹிமான்சி தவான்.










பிரபலமான இடுகைகள்