சட்டங்களை காலில் மிதிக்கும் இணைய நிறுவனங்கள்!
இது சென்னை பற்றிய கட்டுரைதான். இங்குள்ள நிறுவனங்கள் சாலை கான்ட்ராக்டர்களை கையில் போட்டுக்கொண்டு இரவில் சாலைகளைத் தோண்டி இணைய கேபிள்களை புதைத்து குழிகளைக் கூட மூடாமல் சென்றுவிடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
கடந்த மாதம் மின்கம்பத்தில் தொங்கிய கேபிள்களைப் பார்க்காமல் பைக்கில் சென்றவர் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனாலும் சென்னை பெருநகர மாநகராட்சி எந்த விதிகளையும் மாற்றாமல் கள்ள மௌனம் காக்கிறது. யாருக்காக என்று இன்று மக்களுக்கும் தெரிகிறது.
புகார் அளிப்பது எப்படி?
சென்னையில் சாலையில் நீங்கள் குழிதோண்ட வேண்டுமெனில், அதற்கு மாநகராட்சி பொறியாளரிடம் அனுமதிக் கடிதம் பெறவேண்டும். 1913 என்ற எண்ணுக்கு அனுமதி பெறாத இதுபோன்ற செயல்பாடுகளைக் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
முறைப்படி நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சி உதவி பொறியாளர், அல்லது அவரின் கீழேயுள்ள பொறியாளர் அந்த இடத்தை வந்து பார்வையிடுவது அவசியம்.
புகார்களை நம்ம சென்னை அப்ளிகேஷன் வழியாக அளிக்கலாம்.
இதுகுறித்து அறிவுறுத்தல்கள் சென்னை கார்ப்பரேஷன் வலைத்தளத்தில் உள்ளது.
முப்பது நாட்களுக்கு முன்பாக குழிகளைத் தோண்டி கேபிள்களைப் பதிப்பதற்கான அனுமதி பெறவேண்டும். முகப்பேரில் அனுமதி பெற்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதுவும் இரவில் கேபிள்களைப் பதித்துள்ளனர்.
சாலைகளைத் தோண்டி கேபிள்களை பதிக்கும்போது, போக்குவரத்து காவலர்களிடம் அனுமதி பெறுவது அவசியம். பெரும்பாலும் இச்செயல்முறை நடைமுறைக்கு வருவதில்லை. இப்பணிகள் நடைபெறுவது, நிறைவு பெறுவது அனைத்தும் புகைப்படமாக பதிவு செய்யப்படுவது விதிமுறைகளில் ஒன்று. ஆனால் அதேதான். இதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை.
சட்டவிரோத கேபிள்கள் பதிப்பினால் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பாதிக்கப்படுவதோடு லட்ச ரூபாயில் உருவாகும் சாலையும் விரைவில் சேதமாகிறது.
5,925 கி.மீ சாலை சென்னையில் உள்ளது. அதில் 33,500 எண்ணிக்கையில் சாலைகள் போடப்பட்டுள்ளன. 471 பஸ் ரூட்டுகள் இதில் செயல்படுகின்றன.
நன்றி - டைம்ஸ் - கோமல் கௌதம்