பிட்ஸ் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்
பிட்ஸ்!
ஜிம்மி கார்ட்டர்..
1.முப்பத்தி ஒன்பதாவது அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜியாவில் 1924 ஆம் ஆண்டு அக்.1 அன்று பிறந்தார்.
2.கார்ட்டருக்கு சிறிய வயதிலிருந்து கப்பல் மாலுமியாக பணியாற்றவே ஆசை. அக்கனவிற்காகவே அன்னபோலிஸ் கப்பல் பயிற்சி அகாதெமியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். அணு ஆயுதக் கப்பலில் பொறியியலாளராக பணியாற்றினார்.
3.இருபத்து ஒன்பது வயதில் தந்தை திடீரென மரணமடைய, கப்பல் பணியை விட்டு வீடு திரும்பினார். கடையையும் நிலக்கடலைப் பண்ணையைப் பார்த்துக்கொண்டு வெற்றிகரமான வணிகரானார்.
4.அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் வேலைகளைச் செய்துகொடுக்கும் பணியாளர்களுக்கு நன்றி சொல்லுவது, கார்ட்டரின் வழக்கம்.
5.2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கார்ட்டர், அதிபராகும் முன்னர், ஜார்ஜியா செனட்டிலும், அதன் ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
6. சிறுவயதில் தேவாலயத்தில் நன்கொடைக்காக வைத்திருந்த பணத்தைத் திருடிவிட்டார் கார்ட்டர். அதை அங்கேயே கண்டித்தார் அவரது தந்தை. வாழ்வை நல்வழிப்படுத்திய நல்ல நண்பர் என தன் தந்தையைக் குறிப்பிடுவார் கார்ட்டர்.
7. வாரத்திற்கு நான்கு புத்தகங்கள் அநாயசமாக படிக்கும் வேகம் கொண்டவர். உடற்பயிற்சிக்கு சிறுவயதிலிருந்து இன்றுவரை நம்புவது டென்னிஸ் விளையாட்டைத்தான்.
படம் - தி நேஷன்
செய்தி - தி ஸ்காலஸ்டிக்