பேஸ் ஆப்பின் நிறுவனர் பேட்டி!
உலகமெங்கும் சக்கைப்போடு போடும் பேஸ் ஆப்பின் நிறுவனர் யாரோஸ்லேவ் கொன்சரோவ், மைக்ரோசாப்டில் பணியாற்றியவர். இன்று நாற்பது வயதில் உலகம் முழுக்க தன் பேஸ் ஆப் மூலம் பிரபலமாகி இருக்கிறார்.
இத்தனைக்கு இந்த ஆப் செய்வது உங்கள் தற்போதைய புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வயதாக்கி காட்டுவது மட்டுமே. இக்கம்பெனியில் பணியாற்றுவது பனிரெண்டு பேர்கள்தான்.
ரஷ்ய தயாரிப்பு என்றால் அமெரிக்கா சும்மாயிருக்குமா உடனே பேஸ் ஆப் பயனர்களின் தகவல்களை திருடுகிறது என கட்டுரைகள் எழுதுவதோடு அங்குள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர்களும் இதுபற்றி வாய்க்கு வந்ததை பேசத் தொடங்கிவிட்டனர். இற்கு யாரோஸ்லோவ் என்ன பதில் சொல்லுகிறார்? இரண்டு மணிநேரத்தில் எனக்கு 300 போன் அழைப்புகள் வந்துவிட்டன. என்னால் தினசரி வேலைகளைக் கூட செய்யமுடியவில்லை. பேஸ் ஆப்பின் பிரைவசியை மேம்படுத்தும் பணியில்தான் இருக்கிறோம். எங்களுடைய ஆப் இன்று ஆண்ட்ராய்டு, ஐஸ்டோர் என அனைத்திலும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைவரும் இதில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பகிர்ந்து மகிழ்கின்றனர். காரணம், யாருக்குமே பத்து வருஷங்களுக்கு பிறகு நாம் எப்படி இருப்போம் என்று ஒரு குறுகுறுப்பு இருக்குமே அதேதான். நாங்கள் பிரைவசி பாலிசியில் கூறியதைத்தான் பின்பற்றுகிறோம். அதைத்தாண்டிய எதையும் செய்யவில்லை என்கிறார் யாரோஸ்லேவ்.
இலவசமாக தரப்படும் அனைத்து வசதிகளும் பயனர்களின் தகவல்களை விளம்பரதார ர்களிடம் விற்றுத்தான் கல்லா கட்டுகிறார்கள். இதில் ரஷ்யா என்ற நாட்டையோ, அமெரிக்காவையோ சம்பந்தப்படுத்துவது சரியானதல்ல. கூகுள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இதைத்தானே செய்கின்றன. அண்மையில் ஃபேஸ்புக் அபராத த்தொகை கட்ட இசைந்த தும் இதற்குத்தானே?
உங்கள் போனில் நீங்கள் அறியாமல் இன்ஸ்டாலாகும் மென்பொருள் பற்றி கேள்வி எழுப்பலாம். ஆனால் நீங்கள் உங்கள் சுய உணர்வோடு ஒன்றை செய்துவிட்டு அதன் பொறுப்பு பற்றி மூன்றாவது நபரை குற்றம் சொல்வது சரியானதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நன்றி - ஃபோர்ப்ஸ்