இடுகைகள்

தினக்கூலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலூரின் தனித்துவமான பாடிபில்டர்! - சங்கீதா

படம்
  வேலூரில் உள்ள மார்க்கெட்டில் சுமைகளை தூக்குவதுதான் சங்கீதாவின் ஒரே வேலை. சட்டை, பேண்ட் போட்டு வேலைக்கு தயாராக இருக்கிறார். தினசரி இப்படி வேலை செய்தால்தான், வீட்டில் உள்ள இரு குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். 35 வயதான சங்கீதாவை விட்டு கணவர் விலகிப் போய்விட்டார்.  தினக்கூலியாக இப்படி வேலை பார்த்தாலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதுதான் சங்கீதாவின் முக்கியமான லட்சியம். அண்மையில் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான பாடி பில்டர் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.  நான் பேண்ட் சர்ட் போட்டிருப்பதை பார்த்து நிறையப் பேர் எதற்கு இந்த உடை என்று கேட்டிருக்கிறார்கள். எனது வேலைக்கு இது உதவியாக இருக்கிறது. நான் நேர்மையற்ற எந்த விஷயத்தையும் செய்யவில்லை. நான் இப்போது பாடிபில்டர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, என்னை விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்டுகிறார்கள் என்றார் சங்கீதா.  ஜிம்மில் சங்கீதாவிற்கு பயிற்சி கொடுப்பவர், குமரவேல் என்ற ஜிம் மாஸ்டர். இவர் கொடுத்த ஊக்கத்தில்தான் சங்கீதா போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். பாடிபில்டிங் என்பது அதிக செலவு பிடிக்கும் துறை. பயிற்சி மட்டுமல்ல. சத்தான உணவ

கொரோ்னா ஏற்படுத்திய பொருளாதார இழப்பு!

படம்
SCMP கொரோனா பாதிப்பால் சென்னை மாவட்டத்தை விட்டு பிழைக்க வந்த அத்தனை பேரும் உயிர்பயத்துடன் ஊரைப்பார்த்து ஓடி வருகின்றனர். இதில் தொழிலாளர்கள்தான் அதிகம். வட இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ரயில்தான். அவர்கள் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். நூறு பேர் போகமுடியும் பதிவு செய்யப்படாத பெட்டியில் முன்னூறு பேர்களை அடைத்து பெருமைப்படுகிறது இந்திய ரயில்வே. தொழிலாளர்கள் உயிர்ப்பயத்துடன் ஓடினாலும், முதலாளிகள் ஓட முடியாது. பலரும் கொரோனாவினால் சரிந்தி தொழிலை தடுமாற்றத்துடன் நடத்தி வருகின்றனர். கொரோனா பீதியால் மால்கள், சினிமா தியேட்டர்கள், புகழ்பெற்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை தினத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாமல் பலரும் ஆட்களை நீக்கி வருகின்றனர். பிரதமரே சொன்னாலும் வேலை இல்லாதபோது ஆட்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பது சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. தேசிய புள்ளியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த சதவீதம் கடந்த பதினொரு ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும். 2016ஆம் ஆண்டு