இடுகைகள்

அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி உளவியலில் சாதித்த உளவியலாளர் எட்வர்ட்!

படம்
  இவான் பாவ்லோவ் பற்றிய நாய்கள் ஆராய்ச்சி பற்றி பேசியிருந்தோம். அவர் ஆராய்ச்சி செய்தால் பிறர் என்ன சும்மா உட்கார்ந்திருப்பார்களா? இவான் ரஷ்யாவில் முழு முனைப்பாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எட்வர்ட் தோர்ன்டைக் அப்போதுதான் விலங்குகளின் குணங்கள், இயல்புகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியிருந்தார். அமெரிக்காவில் முனைவர் படிப்பிற்காக ஆராய்ச்சியை செய்யவேண்டியிருந்தது. குணநலன் ஆராய்ச்சியாளர் என்ற பெயரை, அறிமுகமாகும் காலத்திற்கு முன்னரே சம்பாதித்தவர். 1890ஆம் ஆண்டு தோர்ன்டைக், படித்து பட்டம் பெறும்போது அறிவியல் முறையிலான உளவியல் என்பது பல்கலைக்கழகங்களில் மெல்ல புகழ்பெற்று வந்தது. இந்த புதிய துறை எட்வர்டை கவர்ந்து இழுத்தது.  ஆனால் அப்போது எதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என அவருக்குத் தெரியவில்லை. பிறகுதான் எட்வர்டின் கவனம் விலங்குகள், அதன் புத்திசாலித்தனம் மீது திரும்பியது. ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் விலங்குகளை சோதிப்பது என முடிவெடுத்தார். இந்த வகையில் எட்வர்ட் செய்த சோதனைகளால், குணநலன் உளவியலில் அடிப்படையான விஷயங்களை உருவாக்கியவராக கருதப்பட்டு போற்றப்படுகிறார்.  ஆய்

15.அதிக மின்கட்டணத்தை மக்களிடம் வாங்க ஆடிய ஆட்டம்! - மோசடி மன்னன் அதானி

படம்
  தேசத்திற்காக அதானி உழைத்தபோது.. ஊழலைப் பற்றிய விசாரணை... ஊழலைப்பற்றிய காவல்துறை விசாரணை   விசாரணைக்காலம் 2006-2010 2011ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, 466 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க தொழிலை செய்பவர்கள் எப்படி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி முறைகேடாக இரும்புத்தாதுவை கடத்துகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. (ப.12) மாநில அரசில் முறைகேடான ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதே குறைகேள் அதிகாரியின் வேலை. அவர் தயாரித்த அறிக்கையில், பெலகிரி அருகே உள்ள துறைமுகத்தை வாடகைக்கு எடுத்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும், கூடவே இன்னொரு நிறுவனமும் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது. பெலகிரி துறைமுகம், ஊழலுக்கான மைய இடத்தைப் பிடித்தது. மோசடியின் மதிப்பு அக்காலகட்டத்தில் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்துள்ளதோடு, முறையான ஆதாய உரிமைத்தொகைகளையும் வழங்கவில்லை. இதுபற்றி சுரங்க நிறுவனங்கள் எப்படி நுட்பமாக ஏமாற்றினார்கள் என்பதை த

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவ

துணிவிருந்தால் எளிதாக செய்யலாம் மோசடியை.. மோசடி மன்னன் அதானி - பகுதி 4

படம்
  தேசப்பற்றும் மோசடியும்இணையும்போது.. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை - அதானி மோசடி  மோசடி மன்னன் அதானி - பகுதி 4 மான்டேரோஸா முதலீட்டு நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநரின் பெயர், அலஸ்டர் குகென்புஹ்ல் ஈவன். இவருக்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் மோசடிகளைச் செய்த தொழிலதிபரான ஜதின் மேத்தாவுடன் தொடர்புண்டு. ஸ்விட்சர்லாந்தில் வாழும் அலஸ்டர், தொண்ணூறுகள் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இதைப்பற்றிய குறிப்பு அவரின் தொழில் சார்ந்த குறிப்பு பக்கங்களில் உள்ளது. ஜதின் மேத்தா, அமெரிக்காவில் வைரத் தொழில் செய்தபோது வங்கிகளில் ஒரு பில்லியன் டாலரை மோசடி செய்தார். பிறகு வரிகள் இலகுவான நாடுகளுக்கு தப்பிச்சென்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்படிப்பட்ட குற்றவரலாறு கொண்டவரின் மகனுக்கு, வினோத் அதானி தனது மகள் கிருபாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதன்மூலம் இவர்கள் நெருக்கமான தொழில் கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர். 2002ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தில் குடாமி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் முதலீடு செய்தது. இந்த ந

கௌதம் அதானி செய்த மோசடிகள் - ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள்

படம்
    கௌதம் அதானி, சமையல் பொருட்கள், மின்சாரம், கட்டுமானம், என ஏராளமான தொழில்களை நடத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 2013ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார். தொழிலதிபர், அவர் செய்யும் தொழில்கள், ஈட்டும் வருமானம் பற்றி சாமானிய மக்கள் ஆர்வம் கொள்ளவோ, பெருமைப்படவோ,   கவலைப்படவோ ஏதுமில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் தொகையைப் பெற்றுள்ளளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின்(எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி) நிதி முதலீட்டையும் தனது அதானி குழும பங்குகள் மூலம் ஈர்த்துள்ளது. அதானி நிறுவனம் கடன் தொகையை கட்டாதபோது, அல்லது அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தால் மக்களே அதன் விளைவுகளை ஏற்று சிலுவையை சுமக்க நேரிடும். அதானி குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை 81,234.70 கோடி. இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மே

பிணை கொடுப்பதற்காக உளவியலாளர்கள் கொடுக்கும் அறிக்கை!

படம்
  பிணை கொடுப்பதற்கான அமைப்பு வெளிநாட்டில் உண்டு. இந்த அமைப்பு குற்றவாளி யார், எப்படிப்பட்டவர், செய்த குற்றத்தின் இயல்பு ஆகியவற்றை அறிந்துதான் மனுவை பரிசீலிக்கிறது.. இந்தவகையில் உளவியலாளர் என்ன அறிக்கை கொடுக்கிறாரோ அதுவும் முக்கியம். இதில் குற்றவாளி பிரச்னையானவர் இல்லை என கொடுத்து வெளியில் சென்று குற்றம் செய்தால் உளவியலாளர் மட்டுமல்ல பிணை கொடுத்த அமைப்பும் மாட்டிக்கொள்ளும். கார்ல் வெய்ன் பன்டிசன் என்பவர் பாலியல் வல்லுறவு செய்த காரணத்தால் பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளானார். ஆனால் பதினைந்து மாதங்களுக்குப் பிறகு கார்லுக்கு பிணை வழங்கப்பட்டது. ஆறே வாரம், போக்குவரத்து சிக்னல் ஒன்றில் காவலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மோசமான குற்றச்செயல் செய்த நபருக்கு எதற்கு முன்கூட்டியே பிணை கொடுக்கிறார்கள்? கார்ல் என்ற நபருக்கு இப்படி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1961ஆம் ஆண்டு தொடங்கி 1984ஆம் ஆண்டு வரையில் பண்ட்சன் நிறைய பிணை விதிகளை மீறித்தான் சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகள் தண்டனை கொடுத்த வழக்கில் கூட பத்து மாதங்களில் பிணை வழங்கப்பட்டு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். கார்லின் க