11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

 









எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா?



2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.  தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.

 



ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு  அனுப்பியது.  பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்  ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,  202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது.

புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.

 

 





லிங்க்டுஇன் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அதிகாரி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபேஸ்புக் தளத்தில், ஜிக்னேஷ் தேசாய்க்கு 2015ஆம் ஆண்டு சிறந்த பணியாளர் விருதை அதானி குழுமம் வழங்கியிருந்த தகவல் கிடைத்தது.

ஹிண்டன்பர்க் அமைப்பு, ரேவார் அலுவலக கதவில் எழுதப்பட்டிருந்த ஜிக்னேஷ் தேசாயும், சமூக வலைத்தளங்களில் இருந்த ஜிக்னேஷூம் ஒன்றா என மின்னஞ்சலில் இணைத்திருந்த தொடர்பு எண்ணை ட்ரூகாலர் ஆப் மூலம் சோதித்தது. இதில் கிடைத்த வலைத்தளம் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இதனோடு ஜிக்னேஷ் தேசாயின் மின்னஞ்சல் முகவரி, தொடர்பில் இருந்தது. அதானி குழும நிறுவனத்தில் உதவி மேலாளராக ஜிக்னேஷ் தேசாய் பணி புரிந்து வந்தார்.   

ராக்கெட் ரீச் என்ற உலகளவிலான தகவல் தளத்தில் ஜிக்னேஷ் தேசாய், அதான குழுமத்தில் உதவி மேலாளராக பணிபுரிவது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஜிமெயில், யாகூ ஆகிய நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரியும் (jdesai1012) இணைக்கப்பட்டுள்ளது.

 



2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்னதாக ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், அகமதாபாத் குடியிருப்பு பகுதியில் அலுவலகம் அமைத்து இயங்கி வந்தபோது, அதானி இன்ஃப்ரா இந்தியாவுக்கு 202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. அந்த இடத்திற்கு ஹிண்டன்பர்க் அமைப்பு சென்று விசாரித்தபோது, வெள்ளி வணிகம் செய்யும் நிறுவனம் அங்கு இயங்குவதற்கான எந்த அடையாளத்தையும் காண முடியவில்லை.

 


கார்டெனியா ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் லிட். மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமோ, சமூக வலைத்தள கணக்குகளோ, ஊழியர்களோ (லிங்க்டுஇன் வலைத்தளப்படி) கிடையாது. வணிக ஆவணங்களின்படியும் எந்த இடத்தில் இயங்குகிறது என தெரியவில்லை.

இணையத்தில் நிறுவனத்தை தொடர்புகொள்ள அளித்துள்ள மின்னஞ்சலை வைத்து தேடியதில் எந்த ஒரு சேவை பற்றியும் தகவல் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று நிறுவனம் உருவாக்கப்பட்ட பிறகு உடனே மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கார்டெனியா நிறுவனம் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அதானி இன்ஃப்ரா (இந்தியா) என்ற அதானி குழுமத்தின் தனியார் நிறுவனத்திற்கு 692.5 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது.  வழங்கியுள்ள கடன் மாற்றக்கூடிய வகையில் கடன் பத்திர வடிவில் உள்ளது.

கார்டெனியா நிறுவனம், அதானி குழுமத்தைச் சேர்ந்ததுதான் என்று கூற ஆதாரம் உள்ளது. அதானி குழுமத்தில்  பணியாற்றும் சுபீர் மித்ரா, கார்டெனியா நிறுவன தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர், அதானி குழுமத்தின் நிழல் நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதானி பவர் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் டிஎம்சிசி நிறுவனத்தின் மேலாளராக சுபீர் மித்ரா செயல்பட்டவர். எமர்ஜிங் நிறுவனம், வினோத் அதானிக்கு சொந்தமானது.



மைல்ஸ்டோன் ட்ரேட்லிங்க்ஸ்  என்ற நிறுவனம் தங்கம், வெள்ளி ஆகியவற்றை விற்கும் வணிக நிறுவனம் என அதன் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ப.2). இந்த நிறுவனத்தை நீங்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ள அகமதாபாத்தில், அதன் அலுவலகம் அமைந்துள்ள அதே பழைய கட்டிடத்தில்தான் மைல்ஸ்டோனும் அலுவலகம் அமைத்து செயல்படுகிறது.

மைல்ஸ்டோன் நிறுவனத்திற்கு வலைத்தளம் ஏதுமில்லை. லிங்க்டு இன் வலைத்தளத்தில் தேடியபோது ஊழியர்களும் இல்லை என தெரிய வந்தது. 2002ஆம் ஆண்டுப்படி, நிறுவனத்தின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அந்த எண் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் துணை கணக்குத் தணிக்கையாளரான தர்மேஷ் பாரிக் அண்ட் கோ.. வினுடையது என தெரிய வந்தது. இவர், அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களுக்கு கணக்குத் தணிக்கையாளராக இருந்தவர்.  

உண்மையில் மைல்ஸ்டோன் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ கணக்குத் தணிக்கையாளர்  தர்மேஷ் பாரிக் அண்ட் கோ கிடையாது. 2015ஆம் ஆண்டு முதல் மைல்ஸ்டோன் நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட கணக்குத் தணிக்கையாளர், அத்வானி பெஷாவாரியா அண்ட் கோ.. தான். வணிக நிறுவனத்தைத் தொடர்புகொள்வதற்கு எதற்கு கணக்குத் தணிக்கையாளரின் பெயரைக் கொடுக்கிறார்கள்? 

2021ஆம் ஆண்டு பங்குதாரர்களின் பட்டியல்படி, மைல்ஸ்டோன் நிறுவனத்தில் ஆறு பங்குதாரர்கள் உள்ளனர். இதில் முக்கியமான பங்குதாரர் பெயர், ராஜேஷ் மண்டப்வாலா. இவரிடம் நிறுவனத்தின் 17.3 சதவீத பங்குகள் உள்ளது. அதானி குழுமத்தில் பல்லாண்டுகளாக பணிபுரிபவர் என ஆவணங்களை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கௌதம் அதானி, ‘’1982ஆம் ஆண்டு ராஜேஷ் மண்டப்வாலா பேக்கேஜிங் பிரிவில் வேலைக்கு சேர்ந்து, அதானி குழுமத்தில் இணைந்தார் ‘’ என கூறியுள்ளார்.

தொடக்கத்தில் மைல்ஸ்டோன் ட்ரேட்லிங்க் நிறுவனம், ஆதித்யா கார்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் நிதியுதவி பெறும் நிறுவனமாகவே செயல்பட்டது.  2013ஆம் ஆண்டு, ஆதித்யா கார்பெக்ஸ், மைல்ஸ்டோனுடன் இணைக்கப்பட்டது. (ப.4). ஆதித்யா கார்பெக்ஸ் நிறுவனம் கௌதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள், அதானி குழும அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டிருப்பது வழக்கு தொடர்பான சுங்கவரி தீர்ப்பாணைய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதானி குழுமத்திலுள்ள தனிநபர்களோடு தொடர்பு கொண்ட நிறுவனமாக மைல்ஸ்டோன் ட்ரேட்லிங்க்ஸ் நிறுவனம் இயங்கி வந்துள்ளது.

நன்றி 

திரு. இரா. முருகானந்தம்

டெனர்.காம்

ஹிண்டன்பர்க் வலைத்தளம் 


கருத்துகள்