திருட்டு, கொலை ஆகியவற்றில் உள்ள உளவியல் கோட்பாடுகள்
மக்கள்
கூடும் இடங்களான மதுபானக்கடை, கிளப், பப் ஆகியவற்றில் எப்படியும் வன்முறை சம்பவங்கள்
நடந்துவிடுவது வாடிக்கை. மது குடித்துவிட்டு மனிதர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டும்போது,
பிறர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் மதுவைத் தொடர்ந்து அடிதடி, கைகலப்பு, கொலை வரை நீள்கிறது. மதுபானக்கடைகளைப் பொறுத்தவரை
அடிப்பவர், அடிபடுபவர் என இருவருமே மது அருந்திய மது பிரியர்கள்தான். நாட்டின் தூண்களான
குடிமகன்கள்தான்.
உளவியலாளர் ஹெண்டர்சன் வன்முறை என்பதை கைதிகள், சிறை நிர்வாக அதிகாரிகள் என இரண்டு வகையாக
பிரித்துக் காட்டுகிறார். குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்த கைதிகளை அடக்கி வழிக்கு
கொண்டுவர, தனக்கேற்றாற்போல நடந்துகொள்ள வைக்க சிறைத்துறை அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக
சிறைக்கைதியை அடித்து உதைப்பது, தனிமைச்சிறையில் அடைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள்.
சிறை என்பது தனி உலகமாக சமூகத்திற்கு கட்டுப்படாத இடமாக உள்ளது. சிறைக்கு அடுத்து குடிநோயாளிகள்
மறுவாழ்வு மையம், மனநல குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை
ஆகியவற்றில் நோயாளிகளின் மீதான வன்முறை என்பது இயல்பாக நடைபெறுகிறது.
சிறை,
மனநல மருத்துவமனை என்பது ஒருவகையில் ஒருவரின் உடலுக்கான சித்திரவதை கூடம் என்றுதான்
கூறவேண்டும். சிறையில் மனம் குலைந்து உடல் சீர்கெட்டுப் போக அதிக வாய்ப்புள்ளன. வன்முறையைப்
பற்றி ஓரளவுக்கு பேசிவிட்டோம். இப்போது கொள்ளைகளைப் பற்றி பார்ப்போம்.
ஆயுதங்களைக்
கொண்டு வீட்டுக்குள் நுழைந்து உரிமையாளர்களைக் கொன்று சொத்துக்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.
பெரும்பாலும் ஆயுதமின்றி திருட்டுகளை செய்பவர்களே அதிகம். வங்கி, கடைகள், நிறுவனங்களில்
நடைபெறும் கொள்ளைகளுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் உளவாளிகள் இருப்பார்கள். இவர்களின்
உதவியுடன் கொள்ளை எளிதாக நடைபெறுகிறது. அடுத்து, தெரு, வணிக சந்தையில் நடைபெறும் வழிப்பறி,
திருட்டுகள் முக்கியமானவை. பர்ஸ், பெண்களின் தோள் பைகள், பொருட்கள் திருடப்படுகின்றன.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் திருடர்கள் எளிதாக தேட்டையைப் போடுவதுதான் ஆய்வுத்தகவலாக
வெளியே வந்துள்ளது.
வீட்டுக்குள்
புகுந்து திருடுவதில் வயதான நபர்களை குறிவைத்து பகலில் அல்லது இரவில் தாக்கி வீழ்த்துகிறார்கள்.
இதில் மரணம் நேரிடுவது இயல்பானது. ஏனெனில் தாக்குபவர்களை விட தாக்கப்படுபவர்களுக்கு
வயது அதிகம். அடுத்து இரவில் மனிதர்கள் அயர்ந்து தூங்கும்போது அவர்களைத் தாக்கி அல்லது
பொருட்களை மட்டும் கொள்ளையடித்து வருவதும் நடக்கிறது. மது அருந்திவிட்டு கொள்ளையடிக்க
செல்லும்போதுதான். சாதாரண திருட்டு, அல்லது கொள்ளை கொலை சம்பவமாக மாறுகிறது.
கொலை
என்பது செய்யப்பட்டுவிட்டது. அவ்வளவுதான் என காவல்துறை ஆவணத்தை மூடிவைத்துவிட்டு உட்கார்ந்துவிட
முடியாது. என்ன காரணம், ஏன் நடந்தது வரையில் சந்தேகம் இல்லாதபடிக்கு கொலையை விசாரிக்க
வேண்டும். சிலர் கொலை நோக்கம் இல்லாமல் கூட கொலையில் மாட்டிக்கொள்வார்கள். தண்டனை குறைவாக
இருந்தாலும். கொலை என்பது பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திதான். இப்படி நடக்கும்
கொலைக்குற்றங்களில் கொலையாளியும், கொல்லப்படுபவரும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நன்கு
அறிந்தவர்களே. நண்பர்கள்தானே எளிதில் எதிரியாக மாற முடியும் என்ற அறிதல் இந்த இடத்தில்
உங்களுக்கு உதவும்.
வோல்ஃப்கேங்
செய்த ஆய்வில், கொலையாளிகளில் பலரும் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள்
பெரும்பாலும் ஆண்கள்தான்.கத்திக்குத்தால் கொலை செய்யப்பட்டிருந்தது. 1950களில் என்பதால்,
அமெரிக்காவிலும் கூட ஆயுதங்கள் நவீனப்படாத காலம். எனவே ஆயுதம் கத்தியாக இருந்திருக்கிறது.
கொலையாளிக்கு ஏற்கெனவே கொலைக்குற்ற வரலாறு இருந்திருக்கிறது. திருமணமான தம்பதிகள் கூட
அதிக குற்றங்களை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சியாகவே உள்ளது.
1977ஆம் ஆண்டு லக்கென்பில் என்ற ஆய்வாளர்
செய்த ஆய்வில் கொலை பற்றிய தகவல்கள் இன்னும் தெளிவாக உள்ளன. கொலை எதற்கு நடந்தது என்பதை
இவர் விளக்கியிருக்கிறார். கொலை செய்யப்பட்டவர், கொலையாளியின் கட்டளையைக் கேட்கவில்லை.
அல்லது அவரை கேலி கிண்டல் செய்திருக்கிறார். எனவே கொலையாளி , ஒருவரைக் கொலை செய்திருக்கிறார்.
லக்கென்பில் ஆய்வுப்படி, கொலை செய்யப்பட்டவர், கொலையாளியே ஏதோ ஒரு விதத்தில் தூண்டியிருக்கிறார்
என்றே கூறுகிறது. வார்த்தைகள், உடல்மொழி, வன்முறை என ஏதோவொன்றாக இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக