பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

 










பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம்.

‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.  

நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது.

பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடிவுகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருந்தால் அவரின் தொழில் வாழ்க்கை சிறக்கும்.

காவல்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து, மருத்துவம் என பல்வேறு துறை சார்ந்த நண்பர்களை பத்திரிகையாளர்கள் கொண்டிருப்பார்கள். இந்த சூழலை பத்திரிகையாளர்கள் தவிர்க்க முடியாது. நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் . அது பொதுவானதுதான். அந்த சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதைத்தான் நான் இங்கு கூறுகிறேன்.

ஒருநாள் தனது துறைசார்ந்த நண்பர்களைப் பற்றி கட்டுரை எழுத வேண்டி வரும்போது எழுதலாமா, வேண்டாமா என மனதில் போராட்டம் நடக்கும். அதில் வெல்வது உண்மையாகவே இருக்கவேண்டும். விலகிப்போவது நம்மைச்சார்ந்த உறவாக, நட்பாக இருக்கவேண்டும். அதுதான் அந்த சூழல்தான். நாளிதழை வாசிக்கும் மக்களுக்கு பயன் அளிக்கும்.

என்னால் நண்பர்களைப் பற்றி தவறாக எழுத முடியாது. உண்மை என்னவென்று தெரிந்தால் கூட அதை எழுதினால் நட்புவட்டம் நிலைக்காது என நினைத்தால் நீங்கள் அக்கட்டுரையை எழுதுவதில் இருந்து விலகிக் கொள்ளலாம். அதுவே வேலைக்கான மரியாதை. உங்கள் நாளிதழ் ஆசிரியரிடம் சொல்லி, அந்த பணியில் இருந்து விலகிக்கொள்ளலாம். பத்திரிகை தொழிலுக்கான மரியாதை அதுவே. குழுவாதம், பிடித்த மனிதர்களுக்கு ஆதரவான கருத்து, பணம் வாங்கிக்கொண்டு செய்தி என்பதெல்லாம் பத்திரிகை நிறுவனம், பத்திரிகையாளர் என இரண்டு தரப்பிலும் பெயர் கெட்டுப்போவதில் சென்று முடியும்.

முதலீட்டு நிறுவனம் மோசடி செய்கிறது என வைத்துக்கொள்வோம். உங்கள் நெருங்கிய உறவினர் தனது நிறுவனம் சார்பாக அதில் பங்குகளை வாங்கியிருக்கிறார் எனில், கட்டுரை எழுதும்போது நீங்கள் அதை குறிப்பிட்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. பத்திரிகையாளரின் வாழ்க்கையே இப்படியானதுதான். சில தேசிய தமிழ் நாளிதழ்கள், தற்போது அவை தொடங்கப்பட்ட நோக்கத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காசுக்காக மட்டுமே இயங்கி வருகின்றன. நேர்மையாக இயங்க வேண்டும் என்பதைப் பற்றி கூறுவதால் மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளைப் பற்றி கவலைப்படவேண்டாம். அவற்றை  காலம் பார்த்துக்கொள்ளும். மக்களே அவற்றை எதிர்காலத்தில் நினைவுகூர மாட்டார்கள்.  

thanks

tenor.com 


கருத்துகள்