உண்மையை வெளிப்படுத்த புலனாய்வு செய்தி முறை! - எதிர்கொள்ளும் விளைவுகள்
பத்திரிகையாளர் அவர் நாட்டில் உள்ள சட்டங்களைப் பின்பற்றித்தான்
செய்தி சேகரிக்க வேண்டும். ஒருவேளை நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. மக்களுக்கு தெரிய
வேண்டிய செய்திகளை அரசு மறைக்கிறது என்றால் அப்போது அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து
செய்தி சேகரிக்கலாம். இந்த ஒரு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு எந்த வழியிலும் ஒருவர்
சட்டத்திற்குப் புறம்பான வகையில் சென்று செய்தி சேகரிக்கக்கூடாது. அப்படி சேகரித்து
வெளியிடுவது மக்களின் நலனுக்காக என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வகையில் பத்திரிகையாளர்,
வெளியிடும் நாளிதழ், ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
புலனாய்வு பத்திரிகையாளர்கள் செயல்பாடு என்பது சட்டத்திற்கு
உட்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த முறையிலும் பத்திரிகையாளர், நிறுவனம்
வழக்குகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
செய்திகளை சேகரிப்பதில் விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்து பிற சமயங்களில் சட்டத்திற்கு
உட்பட்டு செய்தி சேகரிப்பதே நல்லது.
அரசு அமைப்பு, அல்லது தனியார் அமைப்பு, அதிகாரிகள்,
தனிநபரின் போனை ஒட்டுக்கேட்பது, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவது ஆகியவற்றைச் செய்து
செய்தி எழுதுவது என்பது சட்டவிரோதமான தவறான நடைமுறை. இந்த செய்திகளை மக்கள் அறிந்தால்,
பிரச்னைகள் எழும். சட்ட விதிமுறைகள் மீறப்பட்டால் குற்றவியல் சட்டப்படி பத்திரிகையாளருக்கும்,
செய்தியை வெளியிட்ட நிறுவனத்திற்கும் தண்டனை வழங்கப்படும். ஊழல் போன்ற உண்மைகளை தவறான
முறையில் அதாவது சட்டவிரோதமான முறையில் ஒருவர் ஆவணங்களைப் பெற்று நிரூபிக்க முடியாது.
நீதிமன்றம் அதை ஏற்காது.
கார்ட்டூன் ஸ்டாக்
கருத்துகள்
கருத்துரையிடுக