கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

 













புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா

பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர்.

‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர்.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள்.

மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது. பசுமைப் பயணம் என்ற அமைப்பு, சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதை வழங்குகிறது. கடந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது, காத்தவராயன் கூத்து அமைப்பை நடத்தி வரும் அதன் தலைவரான காத்தவராயனுக்கு வழங்கியது மருதம் விழாக்குழ.

‘’நான் தொழில் அடிப்படையில் மெக்கானிக். மனதிருப்திக்காக கூத்தில் பங்கேற்கிறேன். கூத்தில் பெண்ணாக வேடமிடுகிறேன். இந்த கலை வடிவமே சமூகத்தையும், மனிதர்களையும் சீர்படுத்துவதாக நினைக்கிறேன். எனவே, கூத்து கட்டுவதை விடாமல் செய்து வருகிறேன்’’ என்று பேசுகிறார் காத்தவராயன் கூத்து அமைப்பைச் சேர்ந்த அறிவழகன். கலை வடிவம் அழியக்கூடாது என்பதற்காகவே கலைஞர்கள் பலரும் உரிய வருமானம் இல்லாதபோதும கலையை அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தந்து வருகிறார்கள். அக்கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் மருதம் கலைவிழாக்கள் செழித்து வளர வேண்டியது முக்கியம்.

 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

மூலம் கிருத்திகா சீனிவாசன்

Images -TNIE


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்