பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

 

பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம்


தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல். 

பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன. 

நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன். 

நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி?

அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்தான். அதை மறுக்கவில்லை. இந்த நூலில் உள்ள கேள்விகள் அதனளவில் எளிமையானவை. பெரிதாக காலம் இதை சிதைத்துவிடாது என நினைக்கிறேன். கேள்வியும், அதற்கு ஜாலியான தொனியில் அளிக்கப்படும் பதில்தான் இத்தொடரின் சிறப்பு என நினைக்கிறேன்.வாசகர்களும் அதை ஆமோதிக்கக்கூடும் 

நூலை வாசியுங்கள். நன்றி 

அமேசானில் நூலை தரவிறக்கி வாசிக்க....

https://www.amazon.in/dp/B0BW433Y5Y

இந்த நூல் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 

திரு. தி.முருகன், திரு. கே.என்.சிவராமன்.

பத்திரிகையாளர் திரு. தி.முருகன்

பத்திரிகையாளர் தி.முருகன், ஆனந்தவிகடன் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.(2023 படி)

பத்திரிகையாளர் திரு.கே.என்.சிவராமன்


திரு. கே.என். சிவராமன், குங்குமம் வார இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


கருத்துகள்