பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

 










இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம்.

நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா?

நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.  தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்றி  உங்கள் நாளிதழ் ஆசிரியரிடம் கூறுவீர்களா?

வெளிநாட்டு அமைச்சகத்தில் தகவல் தொடர்பு அலுவலக அதிகாரி, உங்களை அழைக்கிறார். அழைத்து, அமைச்சரை அமெரிக்க அரசு தொடர்பான கேள்விகளை கேட்டு நேர்காணல் ஒன்றை செய்யுமாறு சொல்கிறார். பேட்டியை அச்சுக்குப் போகும் முன்பு சரிபார்க்கவும் கேட்டுக்கொள்கிறார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் ஒரு விமான சேவை நிறுவன இயக்குநரை பேட்டி எடுக்கிறீர்கள். அப்போது அவர் அவசர போன் அழைப்பு காரணமாக பேட்டியின் இடையே எழுந்து வெளியே செல்கிறார். அப்போது அவர் மேசையில் உள்ள ஆவணத்தில் அவரது நிறுவனம் திவால் ஆகப்போகிற தகவல் கிடைக்கிறது. இந்த சூழ்நிலை, நீங்கள் எதிர்பார்க்காதது.  இப்போது என்ன செய்வீர்கள்?

 

 நன்றி 

தாம்சன் ராய்ட்டர் பவுண்டேஷன் 

 tenor.com


கருத்துகள்