இடுகைகள்

கலைஞர் ஹபீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒவியவடிவில் போரின் அவலங்கள்!

மினியேச்சர் போர் ! அமெரிக்காவின் நியூ ஹெவனிலுள்ள ஆர்ட் ஸ்டூடியோவுக்குள் சென்றால் சிரியாவின் போர்க்களத்திற்குள் நுழைந்தது போல இருக்கிறது . போரில் குலைந்த வீடுகள் , உடைந்த வீட்டிற்குள் பெண் நுழைவது போன்ற காட்சிகளை பட்டுத்துணியில் தங்கம் மற்றும் வெள்ளி நிற நூல்களில் எம்பிராய்டரி வடிவில் நெய்து மினியேச்சர் வடிவில் உருவாக்கி பார்ப்பவர்களின் மனநிலையை பதற்றத்திற்குள்ளாக்குகிறார் ஓவியக்கலைஞர் ஹஃபீஸ் . சிரிய அமெரிக்கரான முகமது ஹஃபீஸ் , 2011 தொடங்கிய சிரியா போரையும் அமெரிக்கா வாழ்வையும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார் . கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றிவரும் ஹஃபீஸ் , " கியூபாவில் எங்கு பார்த்தாலும் பழைய கார்கள் இருப்பதைப் போலவே சிரியாவில் சோவியத் கார்களைப் பார்க்கலாம் . நாட்டை புதிதாக உருவாக்காமல் இனி எங்கள் நாட்டிற்கு திரும்பிச்செல்ல முடியாது " என்கிறார் ஹஃபீஸ் . ஐயோவா பல்கலையில் கட்டுமானக்கலை படிக்க 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து செட்டிலானவர் ஹஃபீஸ் . டமாஸ்கஸ் நகரை மினியேச்சர் வடிவில் உருவாக்கியது தன்நாட்டிற்கு செல்ல முடியாத ஏக்கம்தான் காரணம் . செப்டம்பர் 11 தாக்