இடுகைகள்

நாவல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!

படம்
pixabay பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு. அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா? இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை. தி இலியட், ஹோமர் ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது.  தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998 நியூயார்க் நகரில் கோப

கிளாசிக் நாவல்கள் - ஆங்கிலம் - புனைவு

படம்
நாம் படிக்க வேண்டிய நாவல்களை தமிழில் லிஸ்ட் போட்டால் இது ஏன் வரவில்லை? இது சிறந்த நாவல் இல்லையா என கூப்பாடுகள் எழும். எனவே நாம் ஆங்கில நூல்களை படிக்கவேண்டியதாக கூறிய நூலைப் பற்றி பேசுவோம். நாலைந்து பேர் சேர்ந்த பெரும்பான்மையாக நல்ல நாவல்தான் என இழுத்தாலே சிறந்த நூல் லிஸ்டில் நூல்களை எடுத்து வைத்துவிடலாம். மொபி டிக் ஹெர்மன் மெல்வில்லே கதையை விடுங்கள். இந்த நூல்தான் இலக்கியத்தில் பாப் கலாசாரத்தை உள்ளே கொண்டு நங்கூரம் அறைந்து நிறுத்தியது என்கிறார்கள். அடுத்து, நூலில் புதிதாக 17 ஆயிரம் வார்த்தைகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் என்பது வேறு சிறப்பு தருகிறது. கதை என்றால் திமிங்கலத்தை இளைஞன் ஒருவன் வேட்டையாடுவதுதான். ஆனால் அதனை தாண்டி  நூலில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுவதுதான் இதனை உலக கிளாசிக் நூலாக மாற்றி உள்ளது. பிரைட் அண்ட் ப்ரீஜூடிஸ் ஜேன் ஆஸ்டின் நவீன நாவல் என்பதற்கேற்ப உருவான காதல் கதை இது. இன்றுவரை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி பல்வேறு நாட்டு எழுத்தாளர்களும் நாவலிலிருந்து சொற்களை, சூழலை திருடி வருகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலுக்கு இன்று கிளாசி

காதல் நாவல்களின் சாதனை!

படம்
Frank Joseph\pinterest காதலுக்கும், காமத்திற்கும் எப்போதுமே இந்தியாவிலும் சரி., உலகிலும் சரி மவுசு உண்டு. என்ன காரணம், எதார்த்தம் மோசம் என்றாலும் கனவிலும் கற்பனையாலும் நாம் அனைவராலும் விரும்பப்பட, அனைவரையும் விரும்பும் கதாபாத்திரமாகவே நினைத்துக்கொள்கிறோம். ரொமான்ஸ் நாவல்களும் இந்த தன்மையில் இருப்பதால் விற்பனையில் உலகமெங்கும் சக்கைபோடு போடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் காதல் நூல்களின் விற்பனை மதிப்பு 1.44 பில்லியன் டாலர்கள். இணைய உலகில் காதல் கதை எழுத்தாளருக்கு கிடைக்கும் சராசரி வருமானத்தொகை சதவீதம் 3. கடந்த ஆண்டு விற்ற இபுக் நாவல்களின் அளவு 70% இ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலில் நாயகி அனஸ்தாசியா ஸ்டீல் எத்தனை முறை உதட்டை கடித்தாள் தெரியுமா?  11 நூறுக்கும் மேற்பட்ட ரொமான்ஸ் நாவல்களை எழுதிக் குவித்தவர் டேனியல் ஸ்டீல். இவர் ஐந்து திருமணங்கள் செய்தவர். அண்மையில் தனது கணவரை 71 வயதில் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மில்ஸ் அண்ட் பூண்ஸ் ரக நாவல்கள் ஆண்டுக்கு எவ்வளவு ரிலீசாகிறது தெரியுமா? 720 தினசரி இரண்டு மணிநேரம்  எழுதிய ஹெச்.எம். வார்டு

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக