காதல் நாவல்களின் சாதனை!
Frank Joseph\pinterest |
காதலுக்கும், காமத்திற்கும் எப்போதுமே இந்தியாவிலும் சரி., உலகிலும் சரி மவுசு உண்டு. என்ன காரணம், எதார்த்தம் மோசம் என்றாலும் கனவிலும் கற்பனையாலும் நாம் அனைவராலும் விரும்பப்பட, அனைவரையும் விரும்பும் கதாபாத்திரமாகவே நினைத்துக்கொள்கிறோம்.
ரொமான்ஸ் நாவல்களும் இந்த தன்மையில் இருப்பதால் விற்பனையில் உலகமெங்கும் சக்கைபோடு போடுகின்றன.
அமெரிக்காவில் மட்டும் காதல் நூல்களின் விற்பனை மதிப்பு 1.44 பில்லியன் டாலர்கள்.
இணைய உலகில் காதல் கதை எழுத்தாளருக்கு கிடைக்கும் சராசரி வருமானத்தொகை சதவீதம் 3.
கடந்த ஆண்டு விற்ற இபுக் நாவல்களின் அளவு 70%
இ.எல். ஜேம்ஸ் எழுதிய ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலில் நாயகி அனஸ்தாசியா ஸ்டீல் எத்தனை முறை உதட்டை கடித்தாள் தெரியுமா? 11
நூறுக்கும் மேற்பட்ட ரொமான்ஸ் நாவல்களை எழுதிக் குவித்தவர் டேனியல் ஸ்டீல். இவர் ஐந்து திருமணங்கள் செய்தவர். அண்மையில் தனது கணவரை 71 வயதில் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
மில்ஸ் அண்ட் பூண்ஸ் ரக நாவல்கள் ஆண்டுக்கு எவ்வளவு ரிலீசாகிறது தெரியுமா? 720
தினசரி இரண்டு மணிநேரம் எழுதிய ஹெச்.எம். வார்டு எழுதிய வார்த்தைகளின் எண்ணிக்கை 5 ஆயிரம். இன்று வரை விற்றுள்ள நூல்களின் எண்ணிக்கை 13 மில்லியன்.
நன்றி: க்வார்ட்ஸ்