பதினைந்து வயதில் தொழிலதிபர்!
15 வயசு தொழிலதிபர்!
இங்கிலாந்தைச் சேர்ந்த பதினைந்து வயது மாணவர் கணக்குத் தணிக்கை நிறுவனம் தொடங்கி சாதனை புரிந்துள்ளார்.
ரன்வீர்சிங் சந்து என்ற மாணவர் தன் முதல் தொழில்முயற்சியைத் தொடங்கியபோது அவரின் வயது 12 .
இப்போது தன் சக நண்பர்களின் தொழில் முயற்சிகளுக்கும் கணக்கு ஆலோசகராக உதவிவருகிறார். ஒரு மணிநேரத்திற்கு 50 பவுண்டுகளை கட்டணமாக பெற்று வருகிறார். 2016 ஆம் ஆண்டு இணையத்தில் அக்கவுண்ட்ஸ் தொடர்பான படிப்பை நிறைவு செய்தார் ரன்வீர்சிங்.
எதிர்காலத்தில் தொழிலதிபராக மாறுவதே என் ஆசை, லட்சியம் என கூறியிருக்கிறார்.
தன் தந்தையின் இடத்தில் ஆபீசை போட்டு பத்து வாடிக்கையாளர்களை பிடித்து கம்பெனியை நடத்தி வருகிறார். எப்படி படிப்பையும் தொழிலையும் சமாளிக்கிறீர்கள் என ஆர்வமாக கேட்டதற்கு, படிப்பும் தொழிலும் வேறுவேறானவை. இதில் மன அழுத்தங்கள் ஏற்படவில்லை என தில்லாக பேசுகிறார் சிங். சில ஆண்டுகளுக்கு முன்பே டெக் பிசினஸ் விருதைப் பெற்றுவிட்டார் சிங்.
படம்-செய்தி: நன்றி: தி இந்து