2030 இல் உலகத்தை மாற்றுவது எது?






Image result for gene editing



2030 இல் உலகம் என்னவாகும்?


என்ன வேண்டுமானாலும் ஆகலாம். காரணம் தொழில்நுட்பம் அனைத்தும் எது உண்மை, பொய் என கணிக்கமுடியாதபடி மாறியிருக்கிறது.

அரசின் கண்காணிப்பு, வணிகத்தின் உலகமயமாக்கம். இயற்கை வளங்கள் சுரண்டல், வன்முறை விளையாட்டுகள், இணையம் சார்ந்த நிதிபரிமாற்றம், கணினி பாதுகாப்பு, ஸ்மார்ட்போன் மேம்பாடு என பல்வேறு விஷயங்கள் மாற விருக்கின்றன.


நிஜம் எது நிழல் எது?


அண்மையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிந்தடிக் ஒபாமா வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கு செலவான நேரம் பதினான்கு மணி நேரம்தான். இன்னொருவர் பேசிய வார்த்தைகளை ஒபாமாவின் உதட்டசையில் பேசிவிட முடியும் என்பதுதான் இவர்கள் நிரூபணம். இதனை ஒபாமாவின் பழைய வீடியோக்களோடு ஒப்பிட்டாலும் உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?time_continue=86&v=AmUC4m6w1wo


சாப்பிடுவதை இனி நீங்கள் தீர்மானிக்க முடியாது


உங்களின் டிஎன்ஏ பற்றி தகவல்களை எடுத்து சேமித்து விடுவதால், அதற்கு பொருத்தமான வெஜ், நான்வெஜ், வீகன் உணவுவகைகளை ஆப்களே பரிந்துரைக்கும். வீடு செல்லும் வழியிலுள்ள
சரியான சைவ உணவகங்களில் சாப்பிட்டு செல்வதற்கான பரிந்துரைகளை ஆப்களே இனி வழங்கும். எதிர்கால தொழில்நுட்பம் இதுதான்.


அல்காரிதங்களே இனி மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளும். அதனால் கவலை வேண்டாம் என்கிறார் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டென்சில் பிரியதர்ஷி.


மரபணு எடிட்டிங்

சீனாவில் மரபணுக்களை மாற்றி குழந்தைகளை எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க வைத்த சர்ச்சையை அறிந்திருப்பீர்கள். அதேதான். இனி மரபணு குறைபாடு என கண்கலங்கி நிற்கும் அவசியம் கிடையாது. இதுகுறித்த ஆராய்ச்சிகள் வெளிவரும்போது, பக்கவிளைவுகளை எளிதாக அறிந்து அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

நன்றி: பிபிசி