இந்தியாவில் மறக்கப்பட்ட சைக்கோ கொலைகாரர்கள்




pinterest



சைக்கோ கொலைகாரர்கள்!

உலகத்தில் குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் சைக்கோ கொலைகாரர்கள் உண்டு. பதறவைக்கும் அவர்களின் பயோடேட்டா இதோ!


நிதாரி கொலைகாரன்

சுரேந்தர் கோலி, மொனிந்தர் சிங் பாந்தரிடம் வேலை செய்த ஆள். நொய்டாவில் வாழ்ந்தவர்களை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தது. நிதாரி கிராமத்தைச் சேர்ந்த நிறைய குழந்தைகளைக் காணவில்லை என்று புகார். நதிமூலம் தேடினால், நிறைய மண்டை ஓடுகளை மொனிந்தர் சிங்கின் வீட்டிலிருந்து எடுத்தனர். கற்பழிப்பு, நரமாமிசத்தை சாப்பிடுகிறார்களா, கடத்தல்காரர்களா என பல்வேறு கருத்துகள் எழுந்தன.  ஐந்து கொலைகளுக்காக சுரேந்தர் கோலி மரணதண்டனைக்காக காத்திருக்கிறார். சிங், பதினொரு கொலை வழக்குகளின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

சார்லஸ் சோப்ராஜ்

1975-76 ஆம் ஆண்டு தென் கிழக்கு ஆசியாவை பதறவைத்தவர் சோப்ராஜ். கொலை செய்பவர்களை கொள்ளையடித்துவிட்டு செல்வது சோப்ராஜ். சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடமும் நம்பிக்கை சம்பாதித்து பின்னர் அவர்களை போட்டுத் தள்ளுவதுஊ இவரின் ஸ்டைல்.   போலீசில் பிடிபட்டவர், 1976 -97 வாக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது. பின்னர் பாரீசில் வாழ்ந்தார். 2004 ஆம் ஆண்டு நேபாளம் வந்தவருக்கு மீண்டும் சிறைவாசம் கிடைத்தது.

சயனைட் மல்லிகா

இந்த அம்மணி எப்படி என்றால், மிடில் கிளாஸ் பெண்களை போட்டுத்தள்ளி நகைகளை கொள்ளையடித்து அப்ஸ்காண்டாகிவிடுவார். கொல்வது, முன்னர் படித்தீர்களே மோகனைப்போல சைலண்டாக சயனைடை பயன்படுத்துவார்.
2007 ஆம் ஆண்டு கைதானவர், 2012 ஆம் ஆண்டு மரணதண்டனைக்கு உள்ளானார். பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் உள்ளார்.


தொகுப்பு: பொன்னையன் சேகர்




பிரபலமான இடுகைகள்