எரித்தாலும் மனிதநேயம் வாழும்!
the battle |
ஒடிசாவில் அந்த கொடூரம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ், அவரது பிள்ளைகளான பிலிப், டிமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக்கொன்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரிலிருந்து 250 கி.மீ தூரத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் நடந்த அநீதி இது.
அவர் இறந்துபோனதை நம்பவே முடியவில்லை. அவர் எங்களோடுதான் சாப்பிட்டார். சந்தாலி, ஒடியா, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பேசுவார். அவரது மகன்களும் கூட இனிமையாக நடந்துகொண்டார்கள் என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிக்ரம் மராந்தி. 700 வீடுகளைக் கொண்ட பழங்குடிமக்கள் வாழும் பகுதி இது. சந்தாலி, முண்டா, கோல்கா ஆகிய இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர்.
கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் |
இங்கு இன்னுமே வறுமை உள்ளது. கல்வியும், உணவும் தரும் யார் பேச்சையும் இம்மக்கள் கேட்பார்கள். உணவு தருபவர், இந்துவோ, கிறிஸ்தவரோ அதில் என்ன பிரச்னை வரப்போகிறது என்கிறார் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த ரோடியா சோரன்.
மாற்றம் வந்திருப்பது கலாசாரம் குறித்துத்தான். யாரேனும் வெளியில் இருந்து வந்து கலாசாரத்தை மாற்ற முயன்றால் உடனே போலீசுக்கு போய்விடுகின்றனர் மக்கள். முதலில் அதனை இவர்களே மூளைக்கு எட்டிய வரையில் தீர்த்தனர். இப்போது போலீஸ் உதவியை நாடுகின்றனர்.
இன்றும் ஸ்டூவர்ட்டை யாரும் மறக்கவில்லை. அவர் தொழுநோய்க்காக உருவாக்கி மையத்தை மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மாயுர்பாஞ்ச் மாவட்டத்தில் மாயுர்பாஞ்ச் தொழுநோய் மையத்தை தன் இருபத்து நான்கு வயதில் உருவாக்கினார் ஸ்டூவர்ட். 1892 ஆம் ஆண்டு இதற்காக உதவியது இவான்கெலிகல் மிஷனரி சொசைட்டி.
36 ஏக்கரில் அமைந்துள்ள தொழுநோய் மருத்துவமனையில் தற்போது 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டூவர்ட் கொல்லப்பட்ட பின்பு அவர் மனைவி கிளாடிஸ் இம்மையத்தின் பொறுப்பேற்றார். பதினைந்து படுக்கைகளுடன் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவு மருத்துவமனையையும் தொடங்கியுள்ளார். இதில் பகுதிநேர மருத்துவர் ஒருவரும், எட்டு பணியாளர்களும் உண்டு. தினசரி பத்து வெளி நோயாளிகள் வருகின்றனர். கிளாடிஸ் மற்றும் அவரது மகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். ஆண்டிற்கு இருமுறை இங்கு வருபவர் இந்த ஆண்டு வரவில்லை.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா