சைக்கோ திரைப்பட பாத்திரங்கள்!

There you go. - 9GAG


பீதியூட்டும் சைக்கோ கதாபாத்திரங்கள்

நிஜத்தில் கொலை செய்கிறார்கள் என்றாலும் திரைப்பட பாத்திரங்கள் வேற லெவலில் மிரட்டுவார்கள். அவர்களின் சில.....



Anton Chigurh (No Country for Old Men)

மனிதர் படம் முழுக்க யாரை ஏறிட்டுப் பார்த்தாலும் நமக்கு வயிற்றைக் கவ்வும். அடுத்த ஷாட் இவன்தான். சும்மாதான் இரேண்டா வாய் விட்டே சொல்லுவதும் உண்டு. சிகர் கேஸ் துப்பாக்கியால் பலரைக் கொல்வது படம் பார்க்கும்போதே திகிலூட்டும். அதிலும் இதனை தமிழ் டப்பிங்கில் பார்த்தீர்கள் என்றால் மோட்சம் நிச்சயம். இரவிலும்  கனவில் சிகர் வருவார். உணர்ச்சியற்ற முகம், பதற்றமற்ற உடல்மொழி என ஆல்டைம் சைக்கோ கொலைகார ர்களில் இவரை மறக்கவே முடியாது. 

Begbie (Trainspotting)

நண்பனாக தோளில் கைபோட்டுக்கொண்டே பீர் பாட்டிலை உடைத்து, அருகிலிருக்கும் நண்பனின் தொண்டையில் சொருகிவிட்டு சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன் மச்சான், கோவிச்சுக்காத என்று சிரிப்பது பெக்பீயின் பாணி. நிச்சயம் இதற்காக நீங்கள் கோப ப் படவே முடியாது. பின்னே நீங்கள் உயிரோடு இருக்கவேண்டுமே!



Alex DeLarge (A Clockwork Orange)

ஸ்டான்லி குப்ரிக்கின் தயாரிப்பு. கூலிப்படையினரில் ஒருவராக வருவார். நிதானமாக அடித்து உதைப்பது, கொல்லுவது, கற்பழிப்பது என இலகுவாக அனைத்தையும் செய்யும் இந்த கேரக்டர் ரத்தத்தை உறைய வைக்கும் பயத்தை பார்வையாளர்களிடையே உருவாக்குகிறார். 

Mr. Blonde (Reservoir Dogs)

பெண்ணையோ, எதிரியையோ அல்ல. போலீசையே கடத்தி வந்து காதை வெட்டி, பெட்ரோலை ஊற்றி அக்னி தகனம் செய்யும் கேரக்டர் இது.


Alonzo Harris (Training Day)

டென்ஷில் வாஷிங்டனின் நடிப்புத்திறமையை ஊருக்கே சொன்ன படம். போலீஸ், போதை மாஃபியா டான் என இரண்டு கேரக்டர்கள். இப்படித்தான் இன்று போலீஸ் பலரும் இருக்கிறார்கள் என்றாலும் சார் நடித்து காட்டியது பீதி ஊட்டியது.


நன்றி: தாட்.கோ