இடுகைகள்

சுசான்னே சிம்ராட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

time 100 - கென்ய மக்களை உயர்த்தும் லட்சிய மனிதன், மரங்களின் தகவல்தொடர்பு ரகசியம்!

படம்
              கென்னடி ஒடிடே kennedy odede தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் சிந்தனையால் சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும். மக்கள் கூட்டம் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு பின்தொடரும். அப்படியான ஒரு கதையே கென்னடியுடையது. கென்யாவின் கிபேராவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர், கென்னடி. முறையான பள்ளிக்கல்வியும் அமையவில்லை. கென்யாவில் உள்ள சேரிகளில் ஒன்றான கிபேராவில் வளர்ந்த கென்னடி, அங்குள்ள மக்களின் தேவைகளை புரிந்துகொண்டார். இதற்குப் பிறகு அவர் செய்த செயல்பாடுகள் அவருக்கு மரியாதையை, பெருமையைத் தேடித் தந்தன. அவரைச் சுற்றி உள்ளவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். வறுமை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு பள்ளி, குடும்ப வன்முறையை எதிர்க்க, தடுக்க தற்காப்புபயிற்சி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகங்கள், மக்கள் நூலகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரமான குடிநீர் எந்திரம். மக்கள் கூட்டுறவு வங்கி என பலவற்றையும் அமைத்து இயங்கி வருகிறார். பொதுநல செயல்பாட்டில் இறங்கிய அவர் எதிர்கொள்ளாத சவால்களே இல்லை எனலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கென்னடியின் லட்சியக் கனவு, இன்று மூன்று மில்லியன் கென்ய