இடுகைகள்

கொசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

கொசுவினால் எய்ட்ஸ் பரவாதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
 பதில் சொல்லுங்க ப்ரோ? சிரிஞ்சின் ஊசி மூலம் எய்ட்ஸ் பரவுகிறது என்றால் கொசு மூலம் ஏன் பரவாது? சிரிஞ்சிலுள்ள ஊசியைப் பயன்படுத்தி எய்ட்ஸ் உள்ளவருக்கு பயன்படுத்தி அதனை தூய்மைப்படுத்தால் அடுத்தவருக்கு பயன்படுத்தினால் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  ஊசியில் ஏற்கெனவே உள்ள டி செல்களைப் பயன்படுத்தி வைரஸ் கிருமி தன்னை பெருக்கிக்கொள்ளும். இதனை பயன்படுத்துபவரின் உடலிலும் உடனே டி செல்களை தனக்கான ஊடகமாக பயன்படுத்தி பெருகத் தொடங்கும். கொசுவின் உடலில் எய்ட்ஸ் வைரஸ் சென்றாலும், அதற்கு டி செல்கள் அங்கு கிடைக்காது. எனவே அதன் செரிமான அமைப்பில் சேர்ந்துவிடும். மலேரியா ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் கொசுவின் வயிற்றில் ஏராளமாக பெருகுகின்றன. ஸ்போரோஸொய்டஸ் எனும் இவை, எளிதாக கொசுவின் எச்சிலில் கலந்து மனிதர்களை தாக்குகிறது.  ஆக்டோபஸ் எப்படி அடிக்கடி நிறம் மாறுகிறது? செபாலோபாட்ஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் ஆக்டோபஸ், ஸ்குவிட், கடில்ஃபிஷ் ஆகிய உயிரினங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை, எதிரிகளை எச்சரிக்க அடிக்கடி உடலின் நிறம் மாற்றும் என்பதுதான். இவற்றின் உடலில் நிறம் மாற்றும் நிறமிகள் உண்டு. இதற்கு, கு

கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு!

படம்
கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு உலகில் பத்தில் ஒருவருக்கு கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புவதாக வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இப்போது அதனை முற்றாக அழிக்கும் ஆய்வுகளும் கூட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனாலும் கூட இதற்கான முழுமையான தீர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை.  பாலூட்டிகள், முதலைகள் என  பல்வேறு விலங்குகளிடமிருந்து ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி எடுக்கின்றன. மனிதர்களை மட்டுமே இப்போது குறிவைத்து தாக்கினாலும் இதற்கு காரணம், பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதுதான்.  இருவாழ்விகள், பாலூட்டிகள், மீன்கள், புழுக்கள் ஆகியவற்றிடமிருந்தும் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உணவைப் பெறுகின்றன. கூடுதல் போனஸாக விலங்குகளுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புகின்றன.  கொசுக்கள் இரவு நேரத்தில் பூக்களின் மீது சென்று அமர்ந்து மகரந்தசேர்க்கைக்கு  உதவுகின்றன என்று பொதுவாக பலரும் கூறுகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகம் கிடையாது என லாரி ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.  இதுபற்றிய முழுமையான தகவல் ஸ்மித்சோனியல் இதழில் வெளியா

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்

கொசுவைக் கொல்லும் பூஞ்சைக் காளான்!

படம்
மலேரியா கொசுக்களை கொல்லும் காளான். மரபணு மாற்றப்பட்ட பூஞ்சைக் காளான், தன்னிடமுள்ள விஷத்தின் மூலம் 45 நாட்களில் மலேரியா கொசுக்களை அழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பார்க்க ஆல் அவுட் விளம்பரம் போல இருந்தாலும் விஷயம் உண்மைதான். மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த கொசு ஒழிக்கும் பூஞ்சைக் காளான் குறித்த ஆராய்ச்சியைச் செய்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிவித்தனர். ஆனால் கொசுக்களை உறுதியாக அழிக்கும் என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த பூஞ்சைக் காளானின் பெயர்  Metarhizium pingshaense. தன் மேல் உட்காரும் கொசுவை எளிதில் உணரும் காளான், குறிப்பிட்ட வேதிப்பொருளைச் சுரக்கிறது. அது கொசுக்களின் ரத்த த்தில் கலந்து அதன் இனப்பெருக்கும் திறனைக் குறைத்து அதனைக் கொல்லுகிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் ரேமண்ட் எஸ்டி லீகர்.  நன்றி: பிபிசி

கொசு விரட்டிகள் கொசுக்களை விரட்டுவது உண்மையா?

படம்
sf ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி கொசுவிரட்டி மெஷின்கள் உண்மையில் வேலை செய்கிறதா? ஆய்வுகள் இல்லை என்றே கூறுகின்றன. இதில் வெளிப்படும் அல்ட்ரா சவுண்டு அலைகள் பூச்சிகளை விரட்டுவதாக கூறுவதும் தற்காலிகமானதே.  மின்காந்த அலைகளை உருவாக்குவதும் பெரிய அளவில் பயன்தருவதில்லை. ஏனெனில் சிலந்திகளுக்கு காதுகள் கிடையாது. ஒரு கிலோ ஹெர்ட்ஸூக்கும் குறைவான அதிர்வுகளையே அவை உணரும். அப்படி என்றால் கொசு விரட்டிகள் விளம்பரத்தில் சொல்லுவதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா? அது உங்கள் அறிவுக்கான சவால்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ் - லூயிஸ் விலாசோன்.