மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது? குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பேசும் மொழியை பழகிக்கொள்கிறது. பிறகு தனது தேவையைக் கூறுகிறது. அதுவரை அந்த குழந்தை கொஞ்சுமொழியில் செய்வது எல்லாமே முயற்சிகள்தான். அதற்கான அர்த்தம் வேறாக உள்ளது என புரிந்துகொள்ளலாம். மொழி என்பது கருத்தை சொல்வதற்கான வாகனம். எனவே மொழி என்பது முக்கியமானதுதான். சொற்கள், வார்த்தைகள் மொழியில் முக்கியமானவைதான். குழந்தையாக இருக்கும்போது சொல்லும் சொல்ல நினைக்கும் சொற்கள், வார்த்தைகள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. குழந்தைகள் மொழியை எப்படி பேசி பழகுகின்றன? பிறந்து முதல் இரண்டு மாதங்களில் குழந்தைகள் எழுப்ப முடிவது ஒலியை மட்டுமே. அந்த நிலப்பரப்பு சார்ந்த மொழியைக் கேட்டு அதை நகல் செய்து பேச முயல்வது, குறிப்பிட்ட சொல், வார்த்தையை பிரதிபலிக்க முயல்வது ஆகியவை நான்கு மாதங்களில் நடக்கிறது. முதல் ஆண்டின் இறுதியில் தாய்மொழியின் சிக்கலான சொற்களை, வார்த்தைகளை பேச முயல்கிறது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில் பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள சொற்களை பிரதியெடுப்பது...