மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?
குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பேசும் மொழியை பழகிக்கொள்கிறது. பிறகு தனது தேவையைக் கூறுகிறது. அதுவரை அந்த குழந்தை கொஞ்சுமொழியில் செய்வது எல்லாமே முயற்சிகள்தான். அதற்கான அர்த்தம் வேறாக உள்ளது என புரிந்துகொள்ளலாம். மொழி என்பது கருத்தை சொல்வதற்கான வாகனம். எனவே மொழி என்பது முக்கியமானதுதான். சொற்கள், வார்த்தைகள் மொழியில் முக்கியமானவைதான். குழந்தையாக இருக்கும்போது சொல்லும் சொல்ல நினைக்கும் சொற்கள், வார்த்தைகள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.
குழந்தைகள் மொழியை எப்படி பேசி பழகுகின்றன?
பிறந்து முதல் இரண்டு மாதங்களில் குழந்தைகள் எழுப்ப முடிவது ஒலியை மட்டுமே. அந்த நிலப்பரப்பு சார்ந்த மொழியைக் கேட்டு அதை நகல் செய்து பேச முயல்வது, குறிப்பிட்ட சொல், வார்த்தையை பிரதிபலிக்க முயல்வது ஆகியவை நான்கு மாதங்களில் நடக்கிறது. முதல் ஆண்டின் இறுதியில் தாய்மொழியின் சிக்கலான சொற்களை, வார்த்தைகளை பேச முயல்கிறது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில் பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள சொற்களை பிரதியெடுப்பது குறிப்பிட்ட தாள லயத்தில் வந்துவிடுகிறது.
ஆ பா, டு பி டா என பேசத்தொடங்குகிறது.
மொழி எப்படி மேம்படுகிறது?
முதல் ஆண்டில் ஒற்றை சொற்களை பேசிப்பழக கற்கிறது. பிறகு பூனை, பேருந்து என சொல்கிறது. இரண்டாவது ஆண்டில் தந்தி கொடுக்கிறார்கள் அல்லவா? அதைப்போல சுருக்கமான சொற்களை கூறத்தொடங்குகிறது. மிட்டாய் வேணும், இன்னும் ஜூஸ் என பேசத் தொடங்குகிறது. இங்கு அதன் தேவைகள் முன்னைவிட தெளிவாக இருக்கிறது அல்லவா? இந்த இடத்தில் குழந்தையால் இருநூறு வார்த்தைகளை பேச முடியும். அடுத்த ஆண்டு, இன்னும் சொற்களை சேர்த்து வாசகமாக பேச முயலும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை பேச தொடங்கும்.
நான்காவது ஆண்டில் இலக்கண பிழைகளோடு வாக்கியத்தை அமைத்து பேசுவார்கள். ஆறாம் வயதில் பத்தாயிரம் வார்த்தைகளை அறிந்துகொண்டிருப்பார்கள். இதெல்லாமே தாய்மொழியில்தான். பிறகு அவர்களை வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ப இருமொழி, பன்மொழி புலவர்களாக்குவது பெற்றோரின் பணபலத்தைப் பொறுத்தது. இதில் குழந்தையின் ஆர்வமும் கூட மறைமுகமாக உள்ளது.
கண்ணாடி சோதனை என்றால் என்ன?
குழந்தை பதினெட்டு மாதங்களில் தன்னை அடையாளம் காண்கிறதா என்பதை கண்டறிய நடத்தப்படும் சோதனை இது. இதன்படி, கண்ணாடியில் தெரியும் குழந்தையின் பிம்பத்தில் மூக்கின் அருகே ஒரு புள்ளி வைக்கப்படும். அதை குழந்தை அடையாளம் கண்டுகொள்கிறதா, அந்த அடையாளத்தில் தனது மூக்கை உரசி சோதிக்கிறதா என்பதே தேர்ச்சிக்கான அளவுகோள். சிம்பன்சி, கொரில்லா, உராங்குட்டான் ஆகிய விலங்கினங்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளன.
குழந்தைகள் பாலினத்தை எப்படி அடையாளம் காண்கிறார்கள்?
தம் மூன்றாவது வயதில் குழந்தைகள் பாலினத்தை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இச்சூழலில் தங்களை ஈர்க்கும் வயது வந்தோரை ஆண்/பெண் உறவினர்களை கடவுளைக் கண்ட பக்தன் போல பின்னாலேயே சுற்றத் தொடங்குகிறார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக