வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

 



வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது. 

பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி கட்டத்தொடங்குவது பதினாறில், வேலைக்கு போவது பதினாறில் என ஆதரவு பிரசாரத்தை செய்து வருகிறார். துணைபிரதமரின் பேச்சு நடுநிலைப்பள்ளி பேச்சுப் போட்டியில் மாணவர்கள் மனப்பாடம் செய்து பேசுவது போல தோன்றும். ஆனால், அவர் அப்படித்தான் பேசி சீர்திருத்த வயது சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். 
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்களின் வாக்களிக்கும் வயது 25 ஆக உள்ளது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் செய்த செயல்களால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி தாலிபன்களுக்கு கைமாறியது. அங்கு தேர்தல் என்ற நடைமுறையே இல்லாமல் போய்விட்டது. எனவே, வாக்களிக்கும் வயது பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. சிங்கப்பூர், லெபனான், ஓமன் ஆகிய நாடுகளில் வாக்களிக்கும் வயது 21 ஆக உள்ளது. 

உதவி - ஸ்ரேயா டெப் - பினான்சியல் எக்ஸ்பிரஸ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!