இடுகைகள்

தடை செய்யப்பட்ட புத்தகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெருப்புச்சொற்களில் அனல் கவிதைகள்- தடை செய்யப்பட்ட புத்தகம்

படம்
தடை செய்யப்பட்ட புத்தகம் வசுமித்ர சிந்தன் புக்ஸ் ரூ.140 சமூகத்தை பிளவுபடுத்தும் அத்தனை சக்திகளுக்கும் தன் சொற்களாலேயே தண்டனையை அறிவித்துவிட்டார் வசுமித்ர. அதற்கான முன்கூட்டிய அறிவிப்பு, தடை செய்யப்பட்ட புத்தகம். மனிதர்களை அடிமையாக்கி சுரண்டியவர்கள், சுரண்டுபவர்கள், சர்வாதிகாரிகள் ஏன் உங்கள் மேலதிகாரி என  யார் படித்தாலும் நூலிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் முட்களாக குத்தும். கவிதைக்கான அத்தனை சொற்களிலும் அவ்வளவு கோபம். எரிமலையின் லாவாவாக நம் மனதை கொந்தளிக்கச் செய்கிறது. அதுவும் கிறிஸ்துவர்கள் படித்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவு தூரம் வரலாற்றை குடைந்து கவிதை செதுக்கியுள்ளார் வசுமித்ர. உலக அரசியல், ராஜபக்ச, ட்ரம்ப், கிறிஸ்தவம், ஏசு, பைபிள், ராமன் என அனைத்தும்  தமிழ் மொழியை நாயாக ஏவி கடிக்க வைத்திருக்கிறார் கவிஞர். படிக்கும் அனைவருக்கும் அவரின் இனப்படுகொலை குறித்த கவிதைகள் கனவிலும் துரத்தும் என்பது உறுதி. அமெரிக்காவுக்கு என்று வரும் கவிதைகளில் லாவாவின் வீச்சு அதிகம். அதிலும் என்ன செய்துகொண்டிருந்தாய் ஜூசஸ்? என்பதை எப்படி கிறிஸ்தவர்கள் படிக்கப் போகிறார்