இடுகைகள்

வாரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!

படம்
  நரசிங்கபுரம் 24/1/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? வேலை இல்லாத சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல் பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது? சென்றவாரம் திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய நூல்கள் தவிர. வரும் மார்ச் பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும்.   அடுத்த ஆண்டுக்கான இதழ்   தொடங்குவதற்கு முன்…. முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக்கிறார்.   நேற

அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

படம்
  தமாக்கா ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.   இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை. அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை ம

இந்தியாவிலிருந்து காணாமல் போகும் நேரு! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  18.11.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும். இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது. மழை காரணமாக ஊரில் போகும். அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது. நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன். வெ.சாமிநாதசர்மா எழுதிய நூல். நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார். இந்த ஆண்டு நேருவின் 132ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது.  இந்துத்துவ அரசு காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர். இந்து தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதைப் படித்தேன். நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை. நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை.  இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். எனவே, உண்மை என்பது பின்னுக்குப் போய் பொய், வதந்திகள் முன்னுக்கு வந்து மேடையை அலங்கரிக்கத்