இடுகைகள்

குங்குமம் - நம்பிக்கை மனிதர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"மாற்றம் சாத்தியம்தான்" - பிரீத்தி ஹெர்மன் சாதித்தது எப்படி?

படம்
மக்களோடு உழைத்தால் மாற்றம் சாத்தியம்தான் ! - ச . அன்பரசு தன் பதினெட்டு வயது வரை கம்ப்யூட்டரைத் தொடாத , லைப்ரரி வாசல் மிதிக்காத பெண் இன்று உலகளாவிய தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ? அதுவும் அப்பெண் தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்தவர் என்பது சூப்பர் ஸ்பெஷல் . ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சேஞ்ச் . ஆர்க் தன்னார்வ அமைப்பில் இணைந்த பிரீத்தி ஹெர்மனின் கடின உழைப்பு இன்று அமைப்பின் நிர்வாக இயக்குநராக அவரை உயர்த்தியுள்ளது . " சமூகத்தில் மக்களின் வாழ்வுக்கு தடையாக இருந்த பிரச்னைகளைத் தீர்க்க முயன்றபோது , சில பிரச்னைகளுக்கு மட்டுமே வழி கிடைத்தது . மக்களின் கரங்களை ஒன்றாக கோர்த்துத்தான் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை காணமுடியும் என்ற முடிவுக்கு வந்தபோதுதான் , எனது நண்பர்கள் சேஞ்ச் . ஆர்க் அமைப்பை பரிந்துரைத்தனர் " என்கிறார் 34 வயதாகும் சமூகப்போராளியான பிரீத்தி ஹெர்மன் . தன் பதினொரு வயதில் இவர் பார்த்த திரைப்படத்தில் வல்லுறுவுக்குள்ளான பெண் தன் குடும்ப கௌரவத்திற்காக தற்கொலை செய்துகொள்வதை பார்த்து பயந்து போனார்...

"நான் படிச்சதே மக்களை உயர்த்தத்தான்"- ஜெயந்தி பருடா

படம்
" நான் படிச்சதே மக்களை உயர்த்தத்தான் " - பழங்குடியில் முதல் ஜர்னலிஸ்ட் - ச . அன்பரசு கல்வி ஒருவருக்கு தரும் தன்னம்பிக்கை என்பது தற்காலிக சந்தோஷங்களான உடை , தோற்றம் என்பதைக் கடந்தது என்பதற்கு சாட்சி ஒடிஷாவைச் சேர்ந்த ஜெயந்தி பருடா . அப்படியென்ன படிப்பில் சாதித்திருக்கிறார் இவர் ? ஒடிஷாவில் மால்கங்கிரி மாவட்டத்திலுள்ள கோயா பழங்குடிகளில் கல்வி கற்க பள்ளி வாசலைத் தொட்டு பட்டம் பெற்று மக்களின் முன்னேற்றத்திற்காக அங்கேயே பணியாற்றியும் வருகிறார் என்பது தலைநிமிர்ந்து பேச வேண்டிய பெருமிதம்தானே ! " எங்கள் பழங்குடி இனத்தில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை பதினைந்து சதவிகிதத்திற்கும் குறைவுதான் " என வேதனையான குரலில் பேசும் ஜெயந்தி , கல்வியின்மையால் நிகழும் குழந்தை திருமணங்களைத் தடுக்க தன்னார்வ அமைப்பைத் தொடங்கி உழைத்து வருகிறார் . ஏழை விவசாயியான தந்தையின் ஊக்கத்தால் ஜெயந்தி உட்பட அக்குடும்பத்தின் நான்கு சகோதரிகளும் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர் . " பள்ளிகளில் குறைந்தபட்சம் அடிப்படை கல்வி கற்றால் மட்டுமே நகரில் ஏதேனும் வேலை கிடைக்கும்...