இடுகைகள்

சிகரெட் அட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

படம்
  மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது.  அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்?  மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களி