இடுகைகள்

பழுது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் முதலில் இருந்து.....

படம்
  மீண்டும் முதலில் இருந்து... லினக்ஸ் மின்ட் இயக்க முறைமையை கணியம் சீனிவாசன் அவர்கள் உள்ளிட்டதோடு ஏராளமான மென்பொருட்களையும் பதிவிட்டு கொடுத்தார். அதனால்தான் நிறைய மின்நூல்களை உருவாக்கவும், வலைப்பூவில் எழுதவும் முடிந்தது. ஆனால் பெருநகரில் இருந்தபோது கிடைத்த வாய்ப்புகள் கிராமத்தில் கிடைப்பதில்லை. எனவே வேறுவழியின்றி லினக்ஸ் இயக்கமுறையை கைவிட்டு விண்டோசுக்கு மாற வேண்டிய நெருக்கடி... இதனால் இதுவரை சேர்த்திருந்த தமிழ் எழுத்துருக்கள், பாடல்கள், அனிமேஷன் படங்கள், ஆங்கில, சீன, கொரிய திரைப்படங்கள் என அனைத்தும் அழித்து விண்டோஸ் 10 இயக்கமுறையை பதிவிட்டுள்ளேன். வேறு வழியில்லை. கொடுமுடியில் லினக்ஸ் தெரிந்த நுட்ப வல்லுநர்கள் பற்றி எனக்கு தெரியாது. கணியம் சீனிவாசன் சாரும் விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறார். இந்த நேரத்தில் கணினிக்கான உதவியை நாட ஈரோடுதான் செல்லவேண்டும். ஈரோட்டை அடைய போக்குவரத்து வசதி இருக்கிறது. ஆனால் அங்கு சென்று லினக்ஸை புதுப்பிக்க ஆட்களை தேடுவது கடினம். அங்கு கடைகளை வைத்திருக்கும் பலரும் விண்டோஸ் சார்ந்த சேவைகளை செய்துகொடுத்து பணம் சம்பாதிப்பவர்கள். எனவே கடையில் ஏறி இறங்கி கணியை சரி

பொருட்களின் அளவு கண்களைப் பொறுத்து மாறுமா?

படம்
மிஸ்டர் ரோனி இருகண்களில் ஒன்று பழுதாகிவிட்டால், மற்றொன்று மூலம் பொருட்களை எளிதாக பார்க்கலாமா? பொருட்களின் அளவு பற்றி நம் நினைவில் ஏற்கனவே சில வரையறைகள் இருக்கும். எனவே, நீங்கள் ஒற்றைக் கண்ணில் பொருளைப் பார்க்கும்போது அதற்கேற்ப மூளை தன்னை மாற்றிக்கொள்ளும். இந்த தன்மையை பைனாகுலர் டிஸ்பாரிட்டி என்று குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணில் ஓர் பொருளைப் பார்க்கும்போது, அதில் வேறுபாடுகள் தெரியும். ரயில்வே பாதைகளைப் பார்த்தால் நமக்குத் தெரிவது மோஷன் பாரலாக்ஸ் எனும் தன்மை. நீண்ட தூரத்திற்கு ஒன்றுபோலவே இருப்புப் பாதைகள் தெரியும். நன்றி- பிபிசி