ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான் - எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த துயரச்சம்பவம்
ஆன்சியன்ட் டிடெக்ட்டிவ் சீன தொடர் யூட்யூப் ஒருவர், தான் செய்யும் செயல் காரணமாக இன்னொரு தரப்பிற்கு மாபெரும் வில்லனாக மாறியிருப்பார். ஆனால், அப்படி செய்த செயலை குறிப்பிட்ட பாத்திரம் மறந்திருக்கும். அல்லது அதைப்பற்றி பெரிதாக கவனம்கொண்டிருக்காது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக விஷயம் தெரியவரும்போது, தன்னுடைய தவறை உணர்ந்து அதை சரிசெய்துகொள்ள முயலும். ரவி மரியா இயக்கிய மிளகா படத்தின் கதை இதையொட்டியது. ஆன்சியன்ட டிடெக்ட்டிவ் தொடரின் மையமும் கூட இத்தகையதே. முதல் காட்சியில், உணவகம் காட்டப்படுகிறது. அங்கு நால்வர் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் கைகளை கட்டி கைதி போல வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே அவரை தங்க புத்தர் சிலை எங்கே என விசாரிக்கிறார்கள். இவர்களது மேசை அருகே வெள்ளுடை அணிந்த இன்னொருவர் அமைதியாக நடப்பதை கவனித்தவாறே நூடுல்ஸ் உண்டுகொண்டிருக்கிறார். இந்த உணவகத்திற்கு ஆறடி உள்ள இன்னொரு வீரர் கத்தியோடு வருகிறார். விசாரணையில் கைகள் கட்டப்பட்டவர், நான் சிலையை திருடவில்லை என்று சாதிக்கிறார். அப்போது வெள்ளுடை அணிந்தவர், கைகளை கட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுகிறார். குற்றவாளி அவர்களில் ஒருவர் ...