இடுகைகள்

காடழிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இயற்கைதான்!

படம்
pixabay உலகளவில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையான சூழலை அழித்து அதில் பெரும் கட்டுமானங்களை நிறுவுவதாகவே இருக்கின்றன. இத்தொழிற்சாலைகளும் கூட இயற்கையான கனிமங்களை நம்பியே உருவாகின்றன. அல்லது அவற்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக உள்ளன. உலக பொருளாதார அமைப்பு இதுபற்றிய அறிக்கையில் இயற்கையைச் சார்ந்தே உலக நாடுகளின் பொருளாதார வலைப்பின்னல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இயற்கை ஆதாரங்களை சார்ந்துள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 44 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 86 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் இயற்கையைச் சார்ந்துள்ள மூன்று துறைகள் கட்டுமானத்துறை 4 ட்ரில்லியன் டாலர்கள் விவசாயத்துறை 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறை - 1.5 ட்ரில்லியன் டாலர்கள் இயற்கையோடு சம்பந்தப்படாத சில துறைகளும் உண்டு. அவை விமானத்துறை, வேதிப்பொருட்கள், சுற்றுலாத்துறை. ரியல் எஸ்டேட், சுரங்கம், உலோகம், நுகர்பொருட்கள் ஆகியவை மறைமுகமாக இயற்கையைச் சார்ந்துள்ளவ