இடுகைகள்

மிரட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுலா என்பது பற்றி எதுவ

ஏழைகள், சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - மல்லிகா சாராபாய், கேரள கலாமண்டல வேந்தர்

படம்
  தனது தாய் இறப்பின்போது.. மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய் மல்லிகா சாராபாய், கேரளா கலாமண்டலத்தின் தலைவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான மல்லிகா, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள தர்ப்பணா அகாடமியை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியை மல்லிகாவின் பெற்றோரான விண்வெளி அறிவியலாளருமான விக்ரம் சாராபாயும், கேரளத்தின் அனக்கார வடக்கத் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் மிர்ணாளினி ஆகியோர் இணைந்து தொடங்கினர். கேரளத்தின் இடதுசாரி அரசு, கேரள கலாமண்டலத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிஃப் முகமதுவை நீக்கிவிட்டு, மல்லிகா சாராபாயை நியமித்துள்ளது. மல்லிகா சாராபாய் பரதநாட்டிய கலைஞர், சமூகசேவகர், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபலம் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டியது. கலாமண்டலத்தின் வேந்தராக ஆனது எப்படிஇருக்கிறது? நாளிதழ்களில் படித்துத்தான் கலாமண்டலத்தில் வேந்தர், துணைவேந்தர் சார்ந்த விஷயங்களை அறிந்துகொண்டிருந்தேன். ஒருமுறை அகாடமியில் நாட்டிய நாடகத்திற்கான ஒத்திகை ச

17. பத்திரிகையாளர்களை வழக்குகள்,ரெய்டு மூலம் மிரட்டிய அதானி - மோசடி மன்னன் அதானி!

படம்
  அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது, பங்குத்தரகர்கள் பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதாக ஏதுமே இருக்காது. ‘’நாங்கள் அதானி குழுமத்தின் பங்குகளை,  உண்மையான பணப்புழக்கம் இன்மை, வட்டி இன்மை, துறையிலேயே 16 மடங்கு அதிக மதிப்பு ஆகியவை காரணமாக கைவிட்டோம்’’ என பங்குத்தரகர்  கூறினார். இவர் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளைக் கைவிட்டதை அடுத்து கூறிய வாக்கியம்தான் இது. அதானி போர்ட் என்ற நிறுவனத்தைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் பங்குகளை ஆராய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதற்கு குழுமத்தின் முதலீட்டு நிதி அளவே காரணம். Adani company Analyst covering per Bloomberg jan 23 Indian Company with similar market cap, Number of analysts covering Adani green energy 1 Bajaj finance: 33 analysis Adani enterprises 2 Larsen & Toubro: 44 analysis Adani Transmission 2 HCL technolog

கடத்தப்பட்ட குழந்தையை பணம் கொடுக்காமல் மீட்கும் பணக்கார தந்தை! - ரான்சம்- மெல்கிப்சன்

படம்
  ரான்சம் ஏர்லைன்ஸ் சர்வீஸ் வைத்து நடத்துபவர் டாம் முல்லன் -மெல்கிப்சன். இவரது மகனை அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் கடத்தி சென்றுவிடுகிறார்கள். அவனை மெல்கிப்சன் போலீசாரோடு சேர்ந்து மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை.  படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இல்லை. முழுக்க உணர்ச்சிமயமான காட்சிகள்தான் அதிகம். மெல்கிப்சன் தான் நேசிக்கும் மகனை இழந்துவிடுவோமோ என பயப்படும் காட்சியிலும் மாடியில் உடைந்து அழும் காட்சியிலும் அவர் நடிக்கிறார் என்பதே மறந்துபோகிறது.  படம் முழுக்க மூளை விளையாட்டுதான். பையனை மீட்க பணம் கேட்போம். அது கிடைத்தவுடன் அவனைக் கொன்றுபோட்டுவிடுவோம் என நினைக்கிறது கடத்தல் கூட்டம். ஆனால் அங்கும் கூட சிறுவன் மீது நேசம் வைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனைப்பொறுத்தவரை பணம் அவசியம்தான். ஆனால் அது கிடைத்துவிட்டபிறகு எதற்கு கொலை என கேட்கிறான். இந்த கேள்வியே அதற்குப் பிறகான காட்சிகளில் சிக்கலாக மாறுகிறது.  அந்தக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் இருவர், குழந்தை மீது நேசம் வைக்கும் தம்பியும், தம்பியை நேசிக்கும் அண்ணன் ஒருவரும்தான். இவர்கள் குழந்தையை கடத்தி வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில், தலைவனின் து

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்

ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

படம்
                 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி. மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ட்விட்டர், அரசு, ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக செயல

இளம் செயல்பாட்டாளர்களை சட்டங்கள் மூலம் அச்சுறுத்தும் மத்திய அரசு!

படம்
                இளம் செயல்பாட்டாளர்களைத் தடுக்கிறதா இந்தியா? பிரைடே பார் ப்யூச்சர் எனும் கிரேட்டா துன்பெர்க் தொடங்கிய சூழல் அமைப்பை இந்தியாவில் பெங்களூருவில் தொடங்கியவர் , திஸா ரவி . தற்போது டூல்கிட் விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவரை கைது செய்வதற்கான டெல்லி போலீசார் பெட்ரோல் , டீசல் விலையையும் பொருட்படுத்தாமல் பெங்களூருவுக்கே சென்று திஸாவை கைது செய்துள்ளனர் . அப்படியேன்ன தவறை அவர் செய்தார் ? விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து டூல்கிட் எனும் போராட்ட முறைகளில் சில மாறுதல்களை செய்தார் . வாட்ஸ் அப்பில் அதனை பகிர்ந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு . போராடுவதற்கு என்ன பிரச்னை ? அதைக்கூட புதிய இந்தியா ஒருவருக்கு அனுமதி தராதா என்ற கேள்வி இக்கைது மூலம் எழுந்துள்ளது . இதன்மூலம் மத்திய அரசின் உளவுத்துறை வெளிப்படையாக சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்துள்ளளது . மக்களுக்காக போராடினால் உங்களுக்கும் இந்த நிலைமைதான் என்பதால் திஸா ரவியுடன் தொடர்புடைய நண்பர்கள் அனைவருமே பீதியில் ஆழ்ந்துள்ளனர் . ஜோத்பூரைச் சேர்ந்தவர் கிரி