இடுகைகள்

டெக்- பாலிகிராப் டெஸ்ட்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்டர்வியூவில் கட்டாயமாகும் பாலிகிராப் டெஸ்ட்!

படம்
பாலிகிராப் டெஸ்ட்! போலீஸ் விசாரணையில் ஒருவர் பொய் சொல்கிறாரா என்று கண்டறிய பயன்படுத்துவதே பாலிகிராப் டெஸ்ட். அமெரிக்காவின் சிஐஏ, எஃப்பிஐ உள்ளிட்ட அரசு ஏஜென்சிகளின் பணியாளர்களுக்கு பாலிகிராப் டெஸ்ட் கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. பொய் கண்டறியும் சோதனையில் உடலில் ஆறு சென்சார்கள் பொறுத்தப்பட்டு மூச்சு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், வியர்வை ஆகியவையும் கை, கால்களின் இயக்கமும் வரைபடமாக காகிதத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த சோதனையில் பொதுவாக நான்கு கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதிலை ஒருவர் கூறினாலும் பாலிகிராப்பில் பதிவாகும் பதிலே நிஜம். இதயத்துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் எகிறி வியர்வை வந்தால் பதில் கூறியவர், பொய் சொல்லியிருக்கிறார் என்பது உறுதி. ஆனால் இதில் தப்பிக்கும் வித்தையை இன்று பலரும் கற்றுக்கொண்டுவிட்டதால் குற்றவாளிகளை இதில் கண்டறிவது கடினமாகி வருகிறது. பல்வேறு வேலைகளுக்கான பணியில் பாலிகிராப் டெஸ்ட், முக்கிய இடம் வகிப்பதோடு இதற்கான கேள்விகளும் இணையத்தில் பரவலாக கிடைக்கிறது.