இடுகைகள்

என்.சொக்கன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று சாதித்த திருபாய் அம்பானி மற்றும் அவரது மகன்களின் கதை! - முகேஷ் அம்பானி - என் . சொக்கன்

படம்
              முகேஷ் அம்பானி என் சொக்கன் கிழக்கு திருபாய் அம்பானி , முகேஷ் , அனில் ஆகியோரின் வாழ்க்கை பற்றி நூலில் சுருக்கமாக கூறியிருக்கிறார்கள் . நூலின் தலைப்பு முகேஷ் அம்பானி என்றாலும் திருபாய் அம்பானிதான் படிக்க சுவாரசியம் தருபவராக இருக்கிறார் . ஒப்பீட்டளவில் நூல் முகேஷ் அம்பானிக்கானதுதான் என்றாலும் நூல் முழுமையாக அவரைப்பற்றிய விளக்கங்களை கூறவில்லை . 1932 இல் பிறந்த திருபாய் அம்பானி பற்றிய தொடக்கம் . அவர் ஏடனுக்கு சென்று வேலை தேடுவது , அதில் சம்பாதிப்பது , பின் மும்பைக்கு வந்து புறாக்கூண்டு வீடுகளில் குடும்பம் நடத்துவது , தன் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுக்க நினைத்து என அனைத்துமே சிறப்பாக உள்ளது . மக்களைப் புரிந்துகொள்ள தனி ஆசிரியரை நியமித்து எளிய வாழ்க்கை பற்றி பாடங்களை சொன்னது அனைத்து தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்தான் . திருபாய் அம்பானி தனது சாதுரியத்தால் அனைத்து விஷயங்களை செய்தாலும் கல்வி பற்றிய அவரது ஏக்கம் உண்மையானது . அதேசமயம் வெறும் படிப்பும் எல்லாம் தெரியும் என்ற மனோபாவமும் ஒருவருக்கு வெற்றியைத் தராது என்பதை

விரும்பிய வேலையைச் செய்தாலே பணம் தேடிவரும்! - ரிச்சர்ட் பிரான்ஸன் - டோன்ட்கேர் மாஸ்டர் - என். சொக்கன்

படம்
  வாசிப்பு.... ரிச்சர்ட் பிரான்ஸன்  டோண்ட்கேர் மாஸ்டர் என்.சொக்கன் கிழக்கு பதிப்பகம் வர்ஜின் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர் இவர் என்று ரிச்சர்டை காட்டினால் யாருமே நம்ப மாட்டார்கள். காரணம், கோட் போட்டு டை கட்டி போஸ் கொடுக்கும் ஆள் கிடையாது. மீட்டிங்குகளில் பாதியிலேயே பலூனில் பறக்க போய்விடுவார். பேசுவதிலும் பெரிய விற்பன்னர் கிடையாது.  ஆனால் உலகில் வர்ஜின் குழுமங்கள் தொடங்காத நிறுவனங்கள் கிடையாது. ஏராளமான நிறுவனங்களை மனம்போன போக்கில் தொடங்கவில்லை. அதற்கான ஆராய்ச்சிகளை செய்து வென்றவர், தற்போது, விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் முயற்சிகளை செய்தபடி இருக்கிறார்.  நூலின் தொடக்கம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடக்கம் போல எழுதப்பட்டுள்ளது. பலூனில் பறந்துகொண்டிருப்பவர், கடலில் குதித்தாரா அல்லது பலூனில் உள்ள எரிபொருள் இருக்கும்வரை அதிலேயே பயணித்து கீழே விழுவாரா என படிக்கும்போதே பதற்றம் ஏற்படுகிறது.  ரிச்சர்ட் பிரான்ஸன் நூலில் இதுபோல ஏராளமான சம்பவங்கள் உள்ளன. இந்த ஒன்றை மட்டுமே சொல்வதற்கு காரணம், இது தொடக்கம்தான் என்பதற்காகவே.  ரிச்சர்ட் தான் வாழ்வில் முதல் வெற்றி பெற்றது ஸ்டூடண்ட் இதழ் மற்றும் வர்