நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம். அதாவது நீங்களும், நானும்தான். ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது. இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர்களின் தேவையை பற்றா