இடுகைகள்

மோதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

இடம்பெயரும் யானைகள்!

படம்
  இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன் தகவல் வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர்.  தகவல்: DowntoEarth

உலகில் நடக்கும் போர்களுக்கு காரணம்! - நாகரிகங்களின் மோதல்!

படம்
உலகின் பல்வேறு விஷயங்களிலும் மூக்கை நுழைக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு காரணம் என்ன? அவர்களின் பொருளாதார வளர்ச்சி. இதை உருவாக்கியவர்கள் அங்கு பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் அல்ல. அகதிகளாக பிழைக்க அங்கு சென்றவர்கள் மூலமாக அந்நாடு இன்று வல்லரசாக மாறியுள்ளது. இந்நிலையிலும் அங்குள்ள கிறித்தவம், முஸ்லீம், இந்துகள்  சார்ந்து நாகரிக மோதல் ஏற்பட்டு வருகிறது.  இதனால் குறிப்பிட்ட மத த்தினரின் வழிபாட்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. இது நாடுகளுக்கு இடையிலான போராக இதுவரை மாறவில்லை. ஆனால் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறது இந்நூல்.  எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்பது செயலாக உருவாகி சண்டை வருகிறது. ஆனால் பொதுவாகவே வேறு கலாசாரம் பண்பாடு கொண்டவர்களை பிறர் ஏற்பதில்லை. இந்த வேறுபாடு பிற மதங்களை விட கிறித்தவம், இஸ்லாமில் அதிகம் உள்ளது. இவை இரண்டும் இன்று வரையும் ஒன்றையொன்று அதிகம் எதிர்த்து வருகின்றன. இன்றைய ஈரான் - சவுதி அரேபியா, ரஷ்யா, போஸ்னியா, சீனா - ரஷ்யா, சீனா - ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் பிளவுக்கோட்டுப் போர்களையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். எப்படி சாதாரண போர்களை வி