இடுகைகள்

தகவல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும

சிறப்பு ஆயுதப்படை சட்டம் - நடைமுறைக்கு வந்த தகவல்கள் அறிவோம்

படம்
  சிறப்பு ஆயுதப்படை சட்டம் 1958ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் கால சிறப்பு சலுகைகள் கொண்ட ஆயுதப்படை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாகலாந்தில் ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை சமாளிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை உருவாகி மக்களவையில் அனுமதி பெற்றது. நான்கு மாதங்களில் அதனை அமல்படுத்தியது.  எப்படி அமல்படுத்துகிறார்கள்? மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகமாக இருந்தால், அதை சமாளிக்க சிறப்பு ஆயுதப்படை சட்டம் உதவுகிறது. இதற்காக அதனை எப்படி குறிப்பிடுகிறார்கள் தெரியுமா? டிஸ்டர்ப்டு ஏரியாஸ் என்று. இந்திய அரசின் உள்துறை அமைச்சர்தான் ஆயுதப்படை சட்டத்தை அமல்படுத்துகிறார். சில சமயங்களில் இதுபற்றிய முடிவை மாநில அரசும் எடுக்கலாம்.  என்ன அதிகாரங்கள் ராணுவத்தினருக்கு கிடைக்கும்? மக்களில் யாராவது ஆயுதங்களை கையில் எடுத்தால், சட்டத்தை மீறினால் உடனே துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட ராணுவத்தினருக்கு அனுமதி உண்டு. ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடியிருந்தால் அதை கலைக்க ராணுவத்தினருக்கு அதிகாரம் உண்டு. யாராவது மேல் சந்தேகம் இருந்தால் உடனே அவர்

வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

படம்
        வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும். போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும். வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது. செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும். வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி,

விக்கிப்பீடியா சாதித்த கதை!

படம்
விக்கிப்பீடியா கூகுளின் யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் போலிச்செய்தி, தவறான செய்திகள், விதிமீறல், வணிகப்போட்டி காரணமாக சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதே நேரத்தில்தான் விக்கிப்பீடியா தன்னார்வலர்களின் பங்களிப்பால் நிதானமாக வளர்ந்து வருகிறது. தவறான தகவல்கள் குறித்து சில முறைப்பாடுகள் இருந்தாலும் நிதானமாக அவற்றைச் சரிசெய்து வளரும் விக்கிப்பீடியா கட்டற்ற அறிவுக்கான ஊற்றாக விளங்குகிறது. இன்று எதுபற்றியும் விக்கிப்பீடியாவைப் பாரேன் என்று சொல்லுமளவு இத்தளம் முன்னேறியுள்ளது. இதுபற்றிய டேட்டா உங்களுக்காக.... 1930 ஆம் ஆண்டு ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஹெர்பர்ட் வெல்ஸ் மற்றும் பால் ஆட்லெட் ஆகியோர் மனிதர்களின் அறிவை தொகுத்து என்சைக்ளோபீடியா ஒன்றை தயாரிக்க நினைத்தனர். 1993 ஆம் ஆண்டு இன்டர்நெட் வல்லுநர் ரிக் கேட்ஸ், இலவசமாக கட்டற்ற கலைக்களஞ்சியம் தேவை என்றனு கூறினார். இதன் பெயராக இன்டர்பீடியா என்று பரிந்துரைத்தார். 1995 ஆம்ஆண்டு  வார்டு கன்னிங்காம் முதல் விக்கி பீடியாவை உருவாக்கினார்.  ஹவாய் மொழி வார்த்தையான குயிக் என்பதிலிருந்து இது உருவானது. ஆப்பிளின் ஹைபர் கார்டு என