இடுகைகள்

மிதுல் பருவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

படம்
  ஸ்லோ டிஸாஸ்டர்  எழுத்தாளர் மிதுல் பருவா அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம். பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை? ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் ப