இடுகைகள்

மைண்ட் ஹன்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் சீரியல் கொலைகாரர்களைப் பிடிக்க தனிப்பிரிவைத் தொடங்கியவரின் போராட்டம்!

படம்
  மைண்ட் ஹன்டர் நூல் மைண்ட் ஹன்டர் ஜான் டக்ளஸ்   அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான் டக்ளஸ், பிஹேவியர் சயின்ஸ் என்ற பிரிவை எப்படி தொடங்கி சீரியல் கொலைகாரர்களைப்பிடித்தார், அதற்கு அவர் உடல், மன ரீதியாக கொடுத்த விலையைப் பற்றி நூல் நெஞ்சிற்கு நெருக்கமாக நின்று பேசுகிறது. ஜான் டக்ளஸ் என்ற அதிகாரி, குவான்டிகோ காவல்துறையில், புரொஃபைல் செய்யும் ஆய்வுப்பிரிவில் தனி நபராக வேலை செய்து பின்னாளில் அதில் நாற்பது ஆட்கள் வேலை செய்யுமளவு சூழலை மாற்றுகிறார். இந்த முன்னேற்றத்திற்கான பயணம் எப்படி இருந்தது என்பதை அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகடியாக விளக்கி கூறுகிறார்.   தொழிலில் ஆர்வம் கூடிய காரணத்தில் பள்ளி ஆசிரியையான மனைவியை விவாகரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதையும் அவர் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் மனம் முழுக்க குற்றவாளிகளைப் பற்றிய நினைவுடன்தான் வாழ்ந்திருக்கிறார். இது, தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என அனைவரையும் வளர்த்தெடுத்தது அவரது மனைவி பாம்தான். ஜான் டக்ளஸ் முழுக்க குற்றவாளிகளை பிடிக்கவெனவே தனது ஆற்றலை அற

கொரிய காவல்துறையில் முதல்முறையாக புரொஃபைல் செய்வதை தொடங்கும் இரு அதிகாரிகளின் போராட்டம்!

படம்
  த்ரோ தி டார்க்னெஸ் - கே டிராமா த்ரோ தி டார்க்னெஸ் கே டிராமா 12 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி   எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்வதில் உள்ள மகிழ்ச்சிக்கென அதை செய்யும் சைக்கோ, சீரியல் கொலைகாரர்கள் கொரியாவில் உருவாகிறார்கள். அவர்களை கொரிய காவல்துறை எப்படி எதிர்கொண்டது. அங்கு குற்றங்களை புரொஃபைல் செய்யும் பிரிவு எப்படி தோன்றியது, அதற்காக இரு காவல்துறை அதிகாரிகள் என்னென்ன சிரமப்பட்டனர் என்பதை கூறும் தொடரிது. தொடர் முடியும்போது, பிஹேவியர் சயின்ஸ் பிரிவை உருவாக்கியவர்களில் ஒருவரான சாங், தங்களது பழைய அலுவலக அறையை வெறுமையான விரக்தியான கண்களோடு பார்த்துக்கொண்டிருப்பார். அந்தக் காட்சியோடு தொடர் நிறைவுபெறும். த்ரோ தி டார்க்னெஸ் தொடரைப் பார்க்கும் பார்வையாளர்களும் கூட அப்படித்தான் மாறிப்போகிறார்கள். அந்தளவு குற்றம், குற்றத்தின் தீவிரம், ரத்தம், வெட்டப்பட்ட உடல், கொலை செய்த காரணம், வக்கிரமான மனங்களின் நியாயப்படுத்தல்கள், விசாரணைக் காட்சிகள் உள்ளன. அமெரிக்க புரொஃபைலரான ஜான் டக்ளஸ் எழுதிய மைண்ட் ஹண்டர் என்ற நூலின் கொரிய மொழிபெயர்ப்பை தொடரில் காட்டுகிறார்கள். அந்த நூலை அடிப்படையாக வ