பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்
பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...