இடுகைகள்

ரயில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

படம்
  பிரேமண்டா இதேரா  வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை.  வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது.  கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள்.  ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்கு

லாஜிஸ்டிக்ஸ் வணிகம் எப்படி செயல்படுகிறது என அறிய வாசிக்க வேண்டிய நூல்!

படம்
  லாஜிஸ்டிக்ஸ் பா பிரபாகரன் கிழக்கு பதிப்பகம்   லாஜிஸ்டிக் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழியில் பெயர்ச்சியல் என்று பெயர். ஒரு சரக்கை கொண்டு வந்து கொடுப்பதாக நிறுவனம் கூறினால், அதை அவர்கள் கப்பல் வழியாக, ரயில் வழியாக எந்த முறையில் அதை பொதிவு செய்து கொண்டு வந்து வரிகளைக் கட்டி ஒப்படைக்கிறார்கள், பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதே பெயர்ச்சியியல். லாஜிஸ்டிக், சப்ளை செயின் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குவது தொடங்கி கப்பல், ரயில், விமானம் என மூன்று வகையிலும் பொருட்களை எப்படி கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என நூலில் விலாவரியாக விவரித்துள்ளார். இந்த நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக பெயர்ச்சியியல் என்றால் என்ன என தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இதற்கு காரணம், நூலை எழுதியவரே பெயர்ச்சியியல் வணிகத்தை செய்வது வருவதுதான். இதனால் அவர் தான் சந்தித்த பல்வேறு அனுபவங்களை கூறும்போது எளிதாக அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கூறவேண்டுமெனில் மாங்கன்றுகளை ஆப்பிரிக்க நாட்டுக்கு கொண்டு செல்லும் பணியைக் கூறலாம். அதை எப்படி கொண்டு செல்வது என்பதை அனுப்புபவர் கூறுவதில்லை. பெயர்ச்சியியல் நிறுவ

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  பொறுப்பு ஏத்துக்கோங்க! எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே?  கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார்.  ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட

பசுமைப்பாதையில் பயணிக்கத் தொடங்கும் இந்திய ரயில்வே!

படம்
  பசுமைமயமாகும் ரயில்துறை! இந்திய ரயில்வே, 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.  இந்திய ரயில்களில் தினசரி பல லட்சம் மக்கள் குறைந்த கட்டணத்தில் நாடெங்கும் பயணித்து வருகின்றனர். 13 ஆயிரம் ரயில்கள் 67 ஆயிரத்து 956 கி.மீ தொலைவுக்கு சென்று பல்வேறு தொலைதூர நகரங்களை இணைக்கின்றன. இப்படி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தோராயமாக ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சற்றே குறைவானதுதான். பொதுப்போக்குவரத்திற்காக 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 115.45 லட்சம் கிலோ லிட்டர் அதிவேக டீசலை ரயில்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  2019/20 காலகட்டத்தில் டீசல் ரயிலில் 43 சதவீத பயணிகளும், மின்சார ரயிலில் 57 சதவீத பயணிகளும் பயணித்துள்ளனர். 2000ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை டீசல் ரயிலில் பயணிக்கும் மக்களின் சதவீதம் 43.5லிருந்து 35.3 சதவீதமாக குறைந்துள்ளது. ‘’’எதிர்வரும் 2030ஆம் ஆணடு முதல் ரயில்வே த

அறிவியலை மாணவர்களுக்கு விளக்கும் 50 கட்டுரைகள்!- துளிர் அறிவியல் கட்டுரைகள்

படம்
            துளிர்  அறிவியல் கட்டுரைகள் ப. 152 விலை ரூ. 150 இந்த நூலில் துளிர் இதழில் வெளியான 50 முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே பொதுமுடக்கம் காரணமாக பிடிஎப் வடிவில் வெளியான துளிர் இதழ்களி்ல் வெளியானவை.  படிக்க ஏதுவான கட்டுரைகள் என்பதை விட நிறைய விஷயங்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற நோக்கில் படித்தால் ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்கலாம்.  சோப்புகளை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எலும்புன்னா எனக்கு பிடிக்குமே என்ற கழுகு பற்றிய கட்டுரை, நோபல் பரிசு 2020, மணற்குளி நண்டுகள் ஆகியவற்றை படிக்க சிறப்பாக இருந்தன.   இந்த நூலில் இயற்பியல் வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகள் பேசப்படுகின்றன. கட்டுரைகள் வழியாக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இந்நூலை படிக்க நினைத்தால் இதிலுள்ள தகவல்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது உறுதி.  கோமாளிமேடை டீம் நன்றி  பாலபாரதி பிரபாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்    

நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்

படம்
                சோனு சூட் திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை . மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர் , ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது . பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது . அதெல்லாம் விடுங்கள் . ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது . அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் . இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?   பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார் . உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும் . அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார் . இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன் . இதன்மூலம் பலரது வாழ்க

டிவி, ரேடியோவுக்கு முன்னதாக நேரம் எப்படி அறிந்தோம்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டிவி, ரேடியோ கண்டுபிடிக்கப்படும் முன்னர் நேரம் எப்படி அறிந்தோம்? சூரியனின் நிழலை வைத்து நேரம் அறிந்தோம். நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறாதீர்கள். இது தோராயமான கணக்கு. துல்லியமான நேரம் ரயில்களுக்கு தேவை. எனவே, தந்தி கண்டறியப்பட்டவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப சிக்னல்கள் அனுப்பப்பட்டன. 1830 ஆம் ஆண்டு மின் தந்தி வந்தபின் நேரம் குறித்து ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்புவது எளிதானது. பின் பல்வேறு நிலப்பரப்பு சார்ந்த இடங்களுக்கு சூரியன் வருவதையொட்டி ரயில்வே நேர அட்டவணை உருவானது. பல மாநிலங்கள் இங்கிலாந்தில் கூட நேர அட்டவணையை மாற்றிக்கொள்ள மறுத்தனர். 1880 ஆம் ஆண்டு பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு நேர அட்டவணையை மக்கள் ஏற்றனர். நாடு முழுக்க ஒரே நேரம் அமலானாது. நன்றி: பிபிசி

ரயில்வே உள்வாடகைக்கு விடப்படும்!

படம்
அரசு தற்போது பராமரித்து நஷ்டத்துடன் நடத்தி வரும் ரயில்வே துறை விரைவில் தனியார்களுக்கு வாடகைக்கு விடப்படவிருக்கிறது. இதற்கான ஏலம் நடைபெறவிருக்கிறது. தற்போது முதல்கட்டமாக குறிப்பிட்ட சுற்றுலா தல ரூட்டுகள் மட்டும் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஐஆர்டிசியில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் கட்டணங்களும் இனி மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. தனியார்களின் கையில் ரயிலின் இயக்கம் செல்லும்போது, அரசு விதிக்கும் கட்டணம் மாற்றப்படும் என்பதை சொல்லவேண்டியதில்லை. இதில் சாதுரியமாக மானியத்துடன், மானியம் இல்லாமல் என இருமுறைகளில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தராமல், வேறு தனியார் நிறுவனங்கள் இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணத்தை உருவாக்குவது அரசின் தந்திரம். இதனை அரசு போக்குவரத்து, அரசு சேவைகள் அனைத்திலும் பார்க்கலாம். இனி சென்னை - கோவை ரூட் ஒரு நிறுவனம், ஹைதராபாத் - சென்னை என பல்வேறு ரூட்டுகளை தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் ஜெயித்து நடத்த முன்வரலாம். இதன் விளைவாக டிக்கெட் விலை, பேருந்து விலையைப் போலவே மாறுவதோடு நிறுத்தங்களில் நிறுத்தும்