இடுகைகள்

குரங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரம்புகளை மீறிய உயிரியல் ஆய்வாளர்!

 லைவால் வாட்சன்,  வில்லியம் கிரைம்ஸ் --- லைவால் வாட்சன், ஒரு மேவரிக் (வழக்கமான வரம்புகளை மீறிய) அறிவியல் பல்துறை அறிஞரும் ஆய்வாளரும், பரபரப்பான விற்பனையான "சூப்பர்நேச்சர்" (Supernature) என்ற புத்தகத்தை எழுதியவரும், சமூகக் குழுக்களுக்கு இடையே நடத்தை மற்றும் யோசனைகள் திடீரென்றும் விவரிக்க முடியாத வகையிலும் பரவுவதை விளக்க "நூறாவது குரங்கு" (hundredth monkey) கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவருமான அவர், ஜூன் 25 அன்று ஆஸ்திரேலியாவின் கிம்பியில் காலமானார். அவருக்கு வயது 69. அவர் அயர்லாந்தின் வெஸ்ட் கார்க்கில் வசித்து வந்தார். அவரது மருமகள் கேத்தரின் லைவால்-வாட்சன் கூறியதாவது, லூயி உடல் சிதைவு மன இறுக்கம் (Lewy body dementia) என்பதால் ஏற்பட்ட பக்கவாதமே அவரது மரணத்திற்குக் காரணம். திரு. வாட்சன், அவரது ஆர்வங்கள் மற்றும் கல்விப் பட்டங்கள் விலங்கு நடத்தை, மானுடவியல், வேதியியல், தாவரவியல் மற்றும் புவியியல் ஆகியவற்றை உள்ளடக்கியவர், பாரம்பரிய அறிவியலின் வரம்புகளால் கசப்பு அடைந்தார், இயற்கை உலகின் மர்மங்களை கையாள இது போதுமானதாக இல்லை என்று அவர் கருதினார். அவரது ஓய்வறியா மனமும், பயண ஆர்...

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்ப...

மூக்கின் அமைப்பு மனிதர்களுக்கு மாறுபட்டிருப்பது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நமது மூக்கு முன்னோர்களான குரங்குகளை வேறுபட்டிருக்கிறது. கூடுதலாக இரு துளைகள் இருப்பது ஏன்? பரிணாம வளர்ச்சியில் சிம்பன்சி, கொரில்லா, மனிதக்குரங்கு ஆகியவற்றிலிருந்து நாம் வந்ததாக கூறுவார்கள். ஆனால் நாம் அந்தப்பயணத்திலிருந்து கிளை பிரிந்து வந்தவர்கள். இந்த வகையில் அவர்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் பங்காளிகள் என்று சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு மூக்கு பெரும்பாலும் பிளாட்டாக இருக்கும்.  நமக்கு அப்படியில்லை. காரணம் நமது மூக்கு வாசனையை நுகர்வதோடு, உடலின் வெப்பத்தை சரியாக வைத்திருக்கும் பணியையும் செய்கிறது. இதன் விளைவாக, மூக்கில் நீர் தேங்க கூடாது. சளி, நீர் என எதுவந்தாலும் குற்றால அருவி போல கொட்டி விடும். ரிசர்வ் வங்கி போல உபரிநிதியை சேமிப்பது போல, நீரைச் சேர்த்தால் உடலில் அதுவே பெரிய நோய் பாதிப்பு ஆகிவிடும்.  நன்றி: பிபிசி