இடுகைகள்

கணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

படம்
  நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.   குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது. இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.   மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது. இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம். வலி எப்போது தொடங்கியது? வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.? வலியின் உணர்வு எப்படி இருக்கிறது? இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா? வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா? வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models

நலத்திட்ட உதவிகள்தான் சிறந்த அரசியல் ஆயுதம்! - பிரசாந்த் கிஷோர், தேர்தல் திட்ட வல்லுநர்

படம்
  பிரசாந்த் கிஷோர்  தேர்தல் திட்ட வல்லுநர் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எது? - ஆம் ஆத்மி அல்லது ஃபிளிப்கார்ட்? ஃபிளிப்கார்ட் பாஜகவின் சிறந்த சொத்து எது? அமைப்பு பலம் தான்.  பாஜகவின் பலவீனம் என்ன? மோடியை மட்டுமே நம்பியிருப்பது அரசியல் அல்லது கொள்கை இதில் நீங்கள் அதிகம் விரும்புவது எது? கொள்கை தான். அரசியல்  என்பது அதன் பிறகு வருவதுதான்.  காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? அதன் பாரம்பரியம்.  அதன் பலவீனம்? செயலற்ற தன்மை  அடையாள அரசியல் அல்லது நலத்திட்டங்கள் இவற்றில் எது சிறந்த அரசியல் ஆயுதம்? நலத்திட்ட உதவிகள்தான்.  2024ஆம் ஆண்டு எந்த கட்சி இந்தியாவை வழிநடத்தும் என நினைக்கிறீர்கள்? அதை மக்கள் தீர்மானிக்க விட்டுவிடலாம்.  அரசியல் வல்லுநர்களில் யாரேனும் ஒருவர். அவர் வாழலாம் அல்லது மரணித்தும் இருக்கலாம். உங்களின் முன்மாதிரி ஒருவரைக் கூற முடியுமா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருந்தாலும் எனக்கு யாரையும் தெரியாது. அப்படி அரசியல் வல்லுநர்களைப் பற்றி நான் படித்ததும் கேள்விப்பட்டதும் கிடையாது.  நீங்கள் மதிக்கும் இந்திய அரசியல்வாதி, அவர் இன்று உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலு