இடுகைகள்

போதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

படம்
    நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...

போதைப்பொருள் கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கால்டாக்சி டிரைவர்!

படம்
        டாப் கியர் தெலுங்கு ஆதி, ரியா, மைம் கோபி போதை மாபியா குழுவின் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்கிறார். அவரது மனைவி உயிரைக் காப்பாற்ற போதைப்பொருளைக் கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் என்னவானது என்பதே கதை. படத்தில் காதல் காட்சி, நகைச்சுவை என எதுவும் கிடையாது. முழுக்க ஆக்சன் திரில்லராக எடுக்க நினைத்த இயக்குநர், அதை படத்தின் பாதியிலேயே மறந்துவிட்டார். நிறைய காட்சிகளில் பிஜிஎம் உறுமலோடு காட்சி மெதுவாக நகர்கிறது. எலிவேஷனுக்கு வெறும் இசை மட்டும் போதாது அல்லவா, காட்சியில் ஏதேனும் இருக்கவேண்டுமே? அப்படி ஏதும் இல்லை. நாயகன் டாக்சி டிரைவர். காதலித்து மனைவியை சார்பதிவாளர் அலுவலகத்தில் மணம் செய்கிறார். ஆனால், அவரின் கூட நிற்க எந்த நண்பர்களுமே இல்லை. அப்புறம் எப்படி சாட்சி கையெழுத்து போடுவது? இப்படியான லாஜிக் இடரல்கள் படம் நெடுக உண்டு. நேரடியாக கதைக்கு போகவேண்டும். எனவே, நாயகனுக்கு காதலி கிடையாது. மனைவி உண்டு. நாயகன், நாயகி தரப்பில் எந்த நண்பர்களும் இல்லை. ஏன், வீட்டில் கூட அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த செட்டப் ஒருவித செயற்கையான தன்மையை ஏற்படுத்துகிறது....

போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

படம்
  சிட்டி ஆஃப் சாவோஸ்  சீன தொடர் 24 எபிசோடுகள் ஐக்யூஇ ஆப் கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது.  சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர்.  சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்ல...

இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

படம்
  sly stone ஸ்லை ஸ்டோன்  அமெரிக்க இசைக்கலைஞர்  ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம்  தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்? மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது.  நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே? மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள...

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும...

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும...

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்ட...

காதலியின் துரோகத்தை சந்தித்து அதை திருப்பி அடிக்கும் ஜூனியர் டான்ஸ் மாஸ்டர்! கோவிந்தா நாம் மேரா...

படம்
  கோவிந்தா நாம் மேரா - விக்கி கௌசல், பூமி, கியாரா கோவிந்தா நாம் மேரா -இந்தி  கோவிந்தா நாம் மேரா இந்தி விக்கி கௌசல், கியாரா அத்வானி, பூமி பட்னாகர், ஷாயாஜி ஷிண்டே கோவிந்தா, சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் நோக்கத்தில் ஜூனியர் டான்சராக வேலை செய்கிறார். அந்த குழுவில் அவருக்கு காதலி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுக்கு. இருவரது நோக்கமும் ஒன்றுதான். தனியாக டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து பணம் சம்பாதித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள், கோவிந்தாவின் மனைவி. அடுத்து அவன் தங்கியுள்ள வீடு. சண்டை பயிற்சியாளரான அப்பாவுக்கும், ஜூனியர் டான்ஸ் மாஸ்டரான அம்மாவுக்கும் பிறந்த பிள்ளை கோவிந்தா. இரண்டாவது திருமணம். சட்டரீதியாக பதிவு செய்யப்படாத திருமணம். இதனால் முதல் மனைவி, அவரின் பிள்ளை இருவரும் சேர்ந்து   வழக்கு போட்டு, கோவிந்தாவின் வீட்டை வாங்க நினைக்கிறார்கள். அந்த வீடு, கோவிந்தாவின் அப்பா   மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது. கல்யாணம் செய்த மனைவி ‘’இரண்டு கோடி பணம் கொடுத்தால், உன்னை விவாகரத்து செய்கிறேன். நான் உன்னை கல்யாணம் செய்ய டௌரி கொடுத்தேன...

உதவாக்கரை பங்குகளை விற்று சாதனை படைத்த மனிதனின் எழுச்சியும், வீழ்ச்சியும் - தி வோல்ஃப் ஆப் வால்ஸ்ட்ரீட்

படம்
  வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் லியனார்டோ டிகாப்ரியோ, மார்க்கரேட் ராபி இயக்கம் மார்ட்டின் ஸ்கார்சி அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் எனும் பங்குச்சந்தை நிறுவனம் பற்றி அறிந்திருப்பீர்கள். அதுதான் உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இடம். அங்கு வேலைக்கு வரும் பெல்ஃபோர்ட் என்ற மனிதன், பங்குச்சந்தை உலகில் மிகப்பெரும் மனிதராக எப்படி உருவானார் என்பதே படத்தின் கதை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றாலும் சொல்வதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளன. டிகாப்ரியோ பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய முக்கியமான காட்சிகள் உள்ளன. அதில் அவர் முதன்முதலில் பங்குச்சந்தை பங்குகளை விற்க வாடிக்கையாளர்களுக்கு போன் செய்ய தன்னை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும் என கற்றுக்கொள்ளும் காட்சி. இங்குதான் போதைப்பொருட்களை பயன்படுத்த கற்கிறார். அவர் வாழ்வின் இறுதிவரையில் போதைப்பொருட்களை பயன்படுத்தி தனது வாழ்க்கையின் உயரம் தொட்டு கீழே விழவும் இதே பழக்கம்தான் வழித்தடமாக அமைகிறது. பங்குகளை விலைபேசி விற்கும் அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கு அவர் வேலை செய்து பெரிதாக சாதிக்க முடியாத சூழ...

இருள் மனிதர்களின் கொந்தளிப்பான வாழ்க்கை - உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் - எதிர் வெளியீடு

படம்
  உப்பு நாய்கள்  லஷ்மி சரவணக்குமார்  எதிர் வெளியீடு  மின்னூல்  இந்த நாவல் சென்னையில் இருளான, நிழல் வேலைகளை செய்யும் மனிதர்களைப் பற்றி துல்லியமாக சொல்லிச் செல்கிறது. வாசிப்பவர்களை நிறைய வன்முறை சம்பவங்கள் வாயடைத்து பீதி கொள்ளச்செய்யும். அந்தளவு காட்சிகள் வன்முறையை விவரிக்கின்றன.  நூலுக்கு வண்ணதாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ல.ச.குவின் அனைத்து நூல்களையும் படித்துவிடுவதாக கூறியிருக்கிறார். நம்பிக்கையான மனிதர்கள் பற்றி மட்டுமே அதிக சிறுகதைகள் எழுதியுள்ளவர், ல.ச.குவின் கதை பற்றி முன்னுரை எழுதியுள்ளது ஆச்சரியமானது. உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர்களையும் அறிய நினைப்பது இயல்பானதுதான். மணிரத்னம் எப்படி பாலா படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டுகிறாரோ அதேபடிதான்.  சென்னையில் சேரி அருகில் வாழ்பவர்களான சம்பத், மணி, சுந்தர் ஆகியோரின் வாழ்க்கைதான் முக்கியமான கதை. இதற்கடுத்து மதுரையில் பிக்பாக்கெட் அடிக்கும் செல்வி, தவுடு அவர்களின் கணவர்கள், விபச்சாரத்தை தொழிலாக செய்யும் முத்துலட்சுமி, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்து சென்னையில் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆதம்மா ஆகியோர் வர...

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேர...