கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!
மெக்சிகோ அதிபர் ஆம்லோ |
கார்டெல்கள்
ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம்
மெக்சிகோ
நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி
கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை
ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு
வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது.
ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது.
என்னதான்
நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும்
தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட
2.3 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம்
பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார்.
ஆனால், தேசிய
காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை.
அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை
பார்த்துக்கொண்டு இயலாமையில் தலைகுனிந்து நிற்கிறது.
அதிபர் ஆம்லோ
பதவிக்கு வந்தபிறகு மட்டும் 1,50, 000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்
கார்டெல்களுக்கு எதிராக அமைப்பு திரட்டி போராடி வந்த செயல்பாட்டாளர் ஹிப்போலிட்டோ மோரா
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தான் படுகொலை ஆவதை முன்னமே ஊகித்து ஊடகங்களில் அவர்
பேட்டிகொடுத்திருந்தது முக்கியமான கவனிக்க வேண்டிய அம்சம். இத்தனைக்கும் அவர் ஊடகங்களில்
நன்றாக வெளித்தெரிந்த ஆள். நடு முழுக்கவும் அவரை மக்கள் அடையாளம் தெரிந்துகொண்டனர்.
ஆனாலும் எளிதாக கார்டெல் கூலிப்படை அவரை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கினர். அதிபர்
ஆம்லோ 2018ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டின் அதிபரானார்.
அப்போது,’ ஆப்ரஜோஸ் நோ பாலஜோஸ்’ என்ற சுலோகனை கூறினார். ‘கட்டித் தழுவுதல் மட்டுமே
தோட்டாக்கள் கிடையாது’ என்று கூறினார். மூன்றே ஆண்டுகளில் போர் முடிவுக்கு வரும் என்று
வாக்குறுதி தந்தார். அடுத்த ஆண்டு ஜூனில் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரப்போகிற சூழலில்,
ஆம்லோ சொன்ன எந்த வாக்குறுதிகளும் நிறைவேறவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வில் அமைதி
கிடைக்கவில்லை.
ஜூன் 29 அன்று
சுட்டுக்கொல்லப்பட்ட மோரா, நாட்டில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
ஆகியோருக்கு இடையிலுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். மெக்சிகோவின்
மிச்சோவாகேன் பகுதியில் மோசமான குற்றங்கள் இந்த வகையில்தான் நடந்து வருகின்றன.
மிச்சோவாகேன் பகுதியில் தேர்தல் வேட்பாளர், மேயர்,
செயல்பாட்டாளர், பத்திரிகையாளர் என எப்படி வேலை செய்தாலும் அது உயிருக்கு ஆபத்தான ஒன்றாகவே
முடிகிறது. கார்டெல்களின் அமைப்பை யாராவது கேள்வி கேட்டால், மாற்ற முயன்றால் அது மக்கள்
படுகொலையாவதில்தான் முடிகிறது. மெக்சிகோவில் உள்ள கார்டெல்கள், அந்த நாட்டில் யார்
வாழ வேண்டும், யார் கொல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகப்பெரும் சக்தியாக
மாறியிருக்கிறார்கள்.
‘’ அரசு,
மோரா இறந்துபோனபிறகு, அதற்கு காரணமான இரண்டு கார்டெல் அமைப்பின் உள்ளூர் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை. அரசு
நீதிக்கு உதவவில்லை என்றால் மக்களே ஆயுதம் தாங்கி அதைப் பெற வேண்டியதுதான் வேறுவழியில்லை’’
என்று மோராவின் தம்பி குவாடாலுப் மோரா விரக்தியான குரலில் பேசுகிறார். மோரா இறப்பதற்கு
இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவரது வீட்டுக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்ட கார்டெல்லின்
கூலிப்படையினர் புகைப்படங்களை மோரா பதிவு செய்து, நாளிதழ்களுக்கு அனுப்பியிருந்தார்.
கூடவே வாழ்த்துக்களும் கட்டித்தழுவலும் என அங்கதமாக எழுதியிருந்தார்.
ஜூன் 29ஆம்
தேதி, இரவு 2.31 அன்று மோராவின் செல்போன் தொடர்பு முழுமையாக அறுந்துபோனது.
டாம் பிலிப்ஸ்
கார்டியன்
வீக்லி
கருத்துகள்
கருத்துரையிடுக