தெரிஞ்சுக்கோ - மனித உடல்
படம் - ஜாக்சன் டேவிட் |
தெரிஞ்சுக்கோ
– மனித உடல்
மனித உடலிலுள்ள
எலும்புகள் அதிகமுள்ள இரண்டு பகுதி கைகளும், கால்களும் ஆகும். கால்களில் 26, கைகளில்
27 எலும்புகள் உள்ளன.
உடலிலுள்ள
ரத்த நாளங்களை விரித்தால் ஒரு லட்சம் கி.மீ.
தூரம் வரும்.
தாடையிலுள்ள
தசையான மசெட்டர், உடலில் மிக வலிமையான தசையாகும். இதன் கடிக்கும் வேகம் 91 கி.கிக்கும்
அதிகம்.
ஒருநாளைக்கு,
1.5 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கிறது.
இரண்டு நுரையீரல்களிலும்
300 மில்லியன் காற்றுப் புரைகள் உள்ளன. இந்த காற்று புரைகளுக்கு அல்வெயோலி என்று பெயர்.
மனிதர்களின்
மூக்கால் இருபதாயிரம் வாசனைகளை வேறுபடுத்தி அறியலாம்.
கண்களிலுள்ள
ரெட்டினாவில் 130 ஒளி உணர்வு செல்கள் உள்ளன. இதனால்தான் மனிதர்களால் வண்ணங்களை எளிதாக
காண முடிகிறது.
மனிதர்கள்
தங்களது வாழ்நாளில் கண்களை தோராயமாக 415 மில்லியன் முறை சிமிட்டுகிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு
ஒருமுறை நாக்கிலுள்ள பழைய சுவைமொட்டுகள் நீக்கப்பட்டு, புதியவை வளருகின்றன.
குழந்தைகளுக்கு
நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின எண்ணிக்கை பத்தாயிரம், ஆனால் பெரியவர்களுக்கு ஆறாயிரம்
மட்டுமே உள்ளது.
கைவிரல்களிலுள்ள
நகம் மாதம்தோறும் 3.47 மி.மீ, கால் நகங்கள் 1.62 மி.மீ நீளமும் வளர்கிறது.
தினசரி ஒருவரின்
மூக்கில் மியூகஸ் எனும் திரவம், ஒரு லிட்டர் சுரக்கிறது.
நாக்கு எட்டு
தசைகளால் ஆனது. இவைதான் ஒருவர் பேச, உணவை சுருட்டி உள்ளே தள்ள உதவுகிறது.
நமது தலையில்
ஒரு லட்சம் மயிர்க்கற்றைகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஐம்பது முதல் நூறு மயிர்கள் கீழே
உதிர்கின்றன.
காதில் உள்ள
ஸ்டிர்அப் என்ற சிறு எலும்பு3 மி.மி. நீளம் கொண்டது.
உடலிலுள்ள
தோல் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை புதிதாகிறது. ஒருவரின் வாழ்நாளில்
இப்படி உதிரும் தோலின் எடை 35 கி.கி ஆகும்.
தினசரி ஒருவரின்
எலும்பு மஜ்ஜையில் இருந்து இரண்டு முதல மூன்று மில்லியன் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.
தினசரி ஒருவரின்
வாயில் எச்சில் சுரப்பிகள் மூலம் அரைலிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை எச்சில் சுரக்கிறது.
மனித உடலிலுள்ள
கல்லீரல், உடலுக்கு அவசியமான 500 பணிகளைச் செய்கிறது. அதில், ரத்த சுத்திகரிப்பு, உணவு
செரிமான உதவியும் உள்ளடங்கும்.
ஒரு நிமிடத்திற்கு
இருபது முறை மூச்சுவிடுகிறோம். ஒருநாளுக்கு 28,800 முறை சுவாசிக்கிறோம்.
குழந்தைகள் பிறக்கும்போது உடலில் 300 எலும்புகள் உள்ளன.
வளரும்போது, அவை ஒன்றோடொன்று இணைந்துவிடுவதால் இறுதியாக 206 எலும்புகளாக மிஞ்சுகின்றன.
பற்கள், ஹைட்ராக்சியாபடைட் என்ற கனிமச்சத்து மூலம் உருவாகிறது.
எனவே, இது கடினமானதாக உள்ளது.
-அவர் வேர்ல்ட்
இன் நம்பர்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக