ஏஐ மூலம் பாப் ஸ்டாரை உருவாக்கி வருகிறேன்! - கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்)

 






இசைக்கலைஞர் கிரைமெஸ் (கிளெர் பௌச்சர்)



இசைக்கலைஞர் கிரைமெஸ்  (கிளெர் பௌச்சர்)

தொழில்நுட்பம் சார்ந்த இசைக்கலைஞர். இவர், எலன் மஸ்கை மணந்து இரு குழந்தைகளைப் பெற்றார். குழந்தைகளுக்கு எக்ஸ், ஒய் என பெயரிடப்பட்டுள்ளன. எலன், எக்ஸ் என்ற தனது குழந்தையை தூக்கிக்கொண்டுதான் அலுவலக சந்திப்புகளை எதிர்கொள்கிறார்.தொழில்நுட்பம் மூலம் இசையை உருவாக்குவதில் புதுமையான நாட்டம் கொண்டவர் கிளெர்.

நீங்கள் உங்கள் குரலை இசை ஆல்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அளித்திருக்கிறீர்கள். கட்டற்ற உரிமையில் குரலை கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா?

குரல் மட்டுமல்ல என்னுடைய முழு அடையாளத்தையே கொடுத்திருக்கிறேன்.

எதற்காக இப்படி செய்தீர்கள்?

நான் நிகழ்ச்சி தயாரிப்பாளர், பொறியாளராக  இருக்க விரும்புகிறேன். நான் சிறந்த முறையில் பாடும் பாடகர் அல்ல. கூச்ச சுபாவம் கொண்டவள். தொடக்கத்தில் நான் உருவாக்கிய பாடல்களுக்கு வீடியோவில் தோன்றிப்பாட பாடகர்களை தேடினேன். யாரும் அப்படி பாட முன்வரவில்லை. மான்ட்ரியலைச் சேர்ந்தவள். சுயாதீனமாக செயல்பட்டேன் என்பதால் பிறருக்கு தயக்கங்கள் இருந்திருக்கலாம்.

 பிற பெண் இசைக்கலைஞர்களோடு பாடும்போது எனது குரலைப் பற்றி கவலைப்பட்டேன். பிறகு வாய்ஸ் எமுலேட்டர் உதவிக்கு வந்தது. ட்ரேக், வீக்எண்ட் ஆகியோர் இதைப் பயன்படுத்துகிறார்கள். மக்களுக்கும் இந்த முறையில் வெளியான பாடகர்களின் குரல் பிடித்திருந்தது.

 அங்கீகாரமற்ற முறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பாடகர்களின் குரல் பயன்படுத்தப்படுவதை ஏற்கிறீர்களா?

இந்த முறையில் நல்ல பாடல்கள் வந்தால் சரிதான். என்னுடைய குரலை அப்படி பயன்படுத்திக்கொள்வதில் தவறு இல்லை.

இதுபற்றி ஆராய்ச்சியில் என்ன முடிவு கிடைத்தது?

நல்ல விஷயங்கள் கிடைத்தன. இரண்டு பாடல்கள் இந்த முறையில் நன்றாக வந்திருந்தன. என்னை பிரதிபலிக்கும் பாடகரை நான் உருவாக்க முயற்சி செய்கிறேன். இதன்மூலம் இந்த உலகில் எப்போதைக்கும் நான் இருப்பேன். நீங்கள் இதைப்பற்றி படித்திருக்கலாம். தன்னைத்தானே பிரதிபலிக்கும் ரோபோட்டுகள் போல வைத்துக்கொள்ளலாம்.

நான் இதைப்பற்றி நூலொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அப்படியா, நிச்சயம் நான் அந்த நூலை வாங்கிப்படிப்பேன். நான் சில நாட்களாக இதுபற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

கட்டற்ற உரிமையில் உங்கள் குரலை செயற்கை நுண்ணறிவுக்கு கொடுத்து உங்களைப் போலவே குரலை உருவாக்க முயல்கிறீர்கள் அப்படித்தானே?

அது ஒரு கனவுத்திட்டம். தன்னைத்தானே பிரதிபலிக்கும் பாப் பாடகர் போல…

நீங்கள் அப்படி பாடலை உருவாக்கும் திட்டத்தை நிறைவேற்றிவிட்டால், வேறு வேலைகளைப் பார்ப்பீர்கள் அப்படித்தானே?

ஆமாம். நான் செய்வதற்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. இப்போது இரண்டு திட்டங்களை செய்துகொண்டிருக்கிறேன். ஒன்று யங் லேடிஸ் இல்லஸ்டிரேட்டட் பிரைமர் – நான் கல்வி சார்ந்த செயல்பாட்டை செய்கிறேன்.

நீங்கள் சாட் ஜிபிடியின் ஆற்ற்ல கொண்ட கருவி பற்றி கூறுகிறீர்களா?

ஆம். அதைப்போலத்தான். நீங்கள், எரிமலை பற்றி கேட்டால், அதற்கு அந்த கருவி இதுதான் எரிமலை என்று கூறுவதோடு, அதற்கென ஒரு ஆளுமை இருக்கும். பயிற்சி கொடுக்கப்பட்ட ஆளுமை எனலாம்.

நீங்கள் கூறுவது வித்தியாசமாக உள்ளது.

உலகில் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் இருப்பது, அம்மாக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். குழந்தைகளோடு எந்திரங்கள் பேசிக்கொண்டு இருக்கும். அவர்கள் நாள் முழுக்க டிவி திரையைப் பார்ப்பதை விட இந்த எந்திரங்களோடு பேசிக்கொண்டிருப்பது சிறந்ததுதான்.

விரைவில் நீங்கள் கூறுவது போன்ற எந்திரங்கள் விற்பனைக்கு வரும் என நினைக்கிறேன்

இதுதொடர்பாக வேலை செய்யும் ஏராளமான மனிதர்களைப் பற்றி அறிவேன்.

தொழில்நுட்ப கலாசாரத்தில் உங்களை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

நான் மிகச்சிறந்த புத்திசாலித்தனம் கொண்ட மனிதர்களை சந்தித்ததில்லை. என்னுடைய சமூக தொடர்புகள் அந்தளவில் இருக்கின்றன. இசையின் இறுதியில் இருப்பதாக உணர்கிறேன். நான் முதலில் இத்துறைக்கு வரும்போது தொழில்நுட்பம் சார்ந்த பாடல் என்பது ஒற்றைப் பாதை கொண்டதாகவே இருந்தது. வீட்டில் லேப்டாப்பில் பாடல்களை உருவாக்குவேன். இப்படி பாடல்களை திடீரென உருவாக்கி வெளியிட்டு வந்தேன். ஒவ்வொரு மாதமும் புதிய பிளக் இன்கள், புதிய மென்பொருட்கள் கிடைத்தன. உண்மையிலே அற்புதமாக காலமாக இதைக் கருதுகிறேன். ஆனால் சமீப காலமாக இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு காரணமாகவா?

செயற்கை நுணணறிவுதான் அடுத்து முக்கியமான விஷயம். செயற்கை நுண்ணறிவு முறையில் பாடல்களை எப்படி உருவாக்குவது என்பதைப் பேசவே  சான்ஃபிரான்சிஸ்கோ வந்திருக்கிறேன். இப்படி செயற்கை நுண்ணறிவு மூலம் இசையை உருவாக்குபவர்களை சந்தித்து பேசவிருக்கிறேன்.  செயற்கை நுண்ணறிவிற்கு எப்படி எழுதுவது, படிப்பது என்பதைக் கற்றுத்தரவேண்டும். இதில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் சிந்திப்பதில் எழுதுவது, பேசுவது முக்கிய பங்காற்றுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் பாடல்களில் ஆன்மா இருக்குமா?

ஆமாம். நான் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருப்பதால் வெளிப்படையாக பேச முடியாது. எதிர்காலத்தில் உள்ள கலை பற்றி எனக்கு கவலை உள்ளது. எதிர்காலத்தில் நகரில் தொழில்நுட்பம் குறைந்த பகுதிகள் உருவாக்கப்படும். பாடும் பாடகர்களுக்கென தனி பொட்டிக் இருக்கும்.

நீங்கள் இதுபோல தொழில்நுட்பம் குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் இருப்பீர்களா?

நான் தொழில்நுட்பம் நிறைந்த இடத்தில் இருப்பேன். ஏனெனில் நான் சாகசத்தை விரும்புகிற ஆள்.

நீங்கள் இறந்தகாலத்திற்கு செல்லவிரும்பினால் எங்கு செல்வீர்கள்?

நான் பீத்தோவனை சென்று பார்ப்பேன். உண்மையில் அவருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா என்று சோதிப்பேன். எனக்கு அவரின் சிம்பொனி பிடிக்கும்.  விவால்டியின் ஃபோர் சீசன்களை அவர் பத்து வயது பள்ளி சிறுமிகளுக்காக எழுதி உருவாக்கினார். இது உண்மையில் ஆச்சரியப்படுத்துகிறது. அவர் இதை எப்படி உருவாக்கினார் என்பதைப் பார்ப்பேன்.

திரைப்படங்கள் மீது ஆர்வம் உள்ளதா?

கணினி விளையாட்டுகள்  இருந்தாலும் திரைப்படங்கள் சிறந்த கலைவடிவம என்பேன். குழந்தைகளுக்கான கதைகளை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கினால் எப்படி இருக்கும்?

நீங்களும் எலனும் தனித்துவமான மனிதர்கள். அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதாக கூறும் விஷயங்கள் என்ன?

தலைமைத்துவம், பொறியியல் திறனும் கொண்ட அவரைப் போன்ற தலைவர்களைப் பார்ப்பது கடினம். நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஸ்பேஸ்எக்ஸ்  சாதனைகளை அருகில் இருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம்.

வயர்ட் இதழ்

ஸ்டீவன் லெவி

கருத்துகள்